1. மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும். 2. மஞ்சள் வறுத்து காரியானவுடன் பொடியாக்கி இந்த பொடியை சாப்பிட்டு வர குடல் புண் எதுவானாலும் குணமாகும். 3. அகத்தி கீரையை உண்பதால் குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால் புழு அழியும். 4. வில்வ பழம் ஓட்டை உடைத்து சதையை எடுத்து சர்க்கரை சேர்த்து பிசைந்து காலையில் மட்டும் சில நாட்கள் சாப்பிட்டு வர குடல் புண், வாய்ப்புண் குணமாகும். 5. குங்கும பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள சுவாசகுழாய் அலர்ஜி, குடல் புண் குணமாகும். 6. நெல்லிக்கனி சாறு சிறிது, பசு கோமியம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும். 7. தினசரி வாழைப்பழம் சாப்பிட குடல் புண் சரும நோயை தடுக்கலாம். 8. மருதாணி இலையைப் பறித்து வந்து நீரில் ஊற வைத்து, அந்த கீரையைச் சாப்பிட்டு வர குடல் புண் குணமடையும். 9. ஆற குடல் புண் உள்ளவர்கள் காலை எழுந்ததும் பல் துலக்கியதும் இளநீர் தண்ணீர் அருந்த குடல் புண் ஆறும். 10. நெல்லிக்கனியின் சாறுடன் சிறிது கோமியம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும். 11. வாழைக்காய் பிஞ்சாக இருக்கும் போது பறித்து வந்து சமையல் செய்து சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும். 12. குங்குமப்பூ இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் தூளை தேனுடன் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும். 13. வில்வ மரத்தின் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும். 14. முட்டைகோஸை நறுக்கி சுத்தம் செய்து இரண்டு டம்ளர் நீர்விட்டு சிறிது உப்பும் போட்டு கொதிக்க வைத்து தண்ணீரைக் குடித்தால் குடல் புண் குணமாகும்.