காய்ச்சல் | | Tamil Best Beauty tips site | Laddu muttai காய்ச்சல் சரியாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

காய்ச்சல் சரியாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

1. கோரைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி குடித்தால் கடுங்காய்ச்சல் குணமாகும். 2. வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் நீங்கும். நிம்மதியான தூக்கம் வரும். 3. மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் மலேரியாகாய்ச்சல் நீங்கும். 4. இத்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் குணமாகும். 5. மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு பொடி தேனில் சாப்பிட காய்ச்சல் குணமாகும். 6. எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து 100 மில்லி சாப்பிட்டு வந்தால் மலேரியாகாய்ச்சல் குணமாகும். 7. வல்லாரை இலை, உத்தாமனி இலை, மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுக்க காய்ச்சல் குணமாகும். 8. வேலிபருத்தி செடியின் இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாறு எடுத்து சமஅளவு தேனுடன் கலந்து காய்ச்சல் வரும் போது கொடுக்க குளிர் காய்ச்சல் குணம் ஆகும். 9. கோரை கிழங்கை காய்ச்சி கஷாயம் குடித்தால் எப்படி பட்ட காய்ச்சலும் குணமாகும். 10. அரச இலை கொழுந்தை பசும் பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்க காய்ச்சல் குணமாகும். 11. ஈர பசையுடன் உள்ள முற்றிய வேப்ப மரத்தின் போட்டு இடித்து 1/4 பங்கு குணமாகும். பட்டையை உரலில் சீரக பொடி கலந்து பசும்பாலில் சாப்பிட குணமாகும். 12. நாய்த்துளசி வேருடன் பிடுங்கி வந்து நீரில் போட்டு கஷாயமாக காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். 13. நெய், தேன். வேப்ப இலை இம்மூன்றையும் எடுத்து ஒன்றாக கலந்து புகை மூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே நிற்கும். 14. தண்ணீரைக் கொதிக்க வைத்து வெண் நொச்சி இலைகளை போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும். சிறிது நேரத்தில் காய்ச்சல் காய்ச்சல் நிற்கும். 15. வில்வ இலையை நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை குடித்தால் வாதக் காய்ச்சல் குணமாகும்.




image

Tag : சளி |

தண்ணிரில் சிறிதளவு பணங்கற்கண்டு,இஞ்சி,லவங்கம் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு ஏலக்காய்,12மிளகு,1ஸ்பூன் சிரகம்,இந்த மூன்றையும் அரைத்து எடுத்து கொதிக்கும் அந்த தண்ணிரில் சேர்த்து அதில் சேர்த்த அனைத்து பொருட்களும் நன்றாக ஒரு டமளர் வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு இதனை இரவில் குடித்து வந்தால் சளி காலையில் மலம் வழியாக வெளியேறும்.
| 29-05-2020
sitha-paati-vaithiyam
1. குப்பைமேனி சாறு, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தடவினால் வீக்கம் குணமாகும். 2. வேலி பருத்தி சாறு, சுண்ணாம்பு கலந்து கால்வீக்கத்திற்கு தடவி வர குணமாகும். 3. புங்கன் இலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி வீக்கத்தின் மீது கட்டினால் வீக்கம் வாடி அகலும். 4. அடிபட்ட வீக்கம் குணமாக சுத்தி செடி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அடிபட்ட வீக்கத்தின் மீது பற்று போட்டு வர அடிபட்ட வீக்கம் குணமாகும். 5. கண்டங்கத்திரி இலையை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் வீக்கம் வற்றும். 6. சுக்கு, ஆவாரம்பட்டை சம அளவு எடுத்து 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து, தினசரி 2 வேளை சாப்பிட்டுவர கை கால் வீக்கம் போகும் 7. அமுக்கிரா கிழங்கை மைபோல் அரைத்து வீக்கத்தின் மேல் போட வீக்கம் குறையும். 8. சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வீக்கம் குறையும். 9. பிரண்டை சாறு, உப்பு, புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரண குணம் கிடைக்கும். 10. உடலில் எந்த நோய் வந்தாலும் முதலில் ஏற்படுவது வீக்கம் தான். அந்த வீக்கத்தை போக்க கரும்பவளத்தை நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து மைய அரைத்து வீக்கத்தின் மீது தடவி வர வீக்கம் உடனே குறையும். 11. கால்களில் வீக்கம் ஏற்பட்டால் உத்தாமணி என்னும் வேலிப்பருத்தியின் இலைச்சாற்றை எடுத்து வீக்கத்தின் மேல் தடவி வர வீக்கம் உடனே குறையும்.
Laddu Muttai | 19-04-2020
1. அசல் விளக்கெண்ணெய் இரவில் அக்குள்களில் தேய்த்து கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடைவில் நீங்கும். 2. காக்கிரட்டான் இலை சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து 1/2 கரண்டி சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து மிகுவியர்வை குணமாகும். 3. இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவி வர உள்ளங்கை, கால் வியர்ப்பது நின்றுவிடும். 4. உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக்காயைச் சேர்த்து வர தூர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும். 5. காக்கணா செடியின் இலைகளின் சாறுடன் தேன் கலந்து இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வியர்வை அதிகம் வெளியேறுவதைத் தடுக்கலாம். 6. வியர்வை நாற்றம் உள்ளவர்கள் சிறிது அமோனியாவைக் கலந்து தண்ணீர் குடித்து வர நாற்றம் போகும்.
Laddu Muttai | 19-04-2020
1. கடுக்காய்த் தோலை மைய இடித்து தூள் செய்து வைத்து விக்கல் வரும்போது கால் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட விக்கல் வராது. 2. முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்க விக்கல் குணமாகும். 3. நெல்லிக்காய் இடித்து சாறுபிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் தீரும். 4. கீழா நெல்லிச் செடியின் வேரை வாயில் போட்டு சிறிது நேரம் ஆனால் விக்கல் உடனே நிற்கும்.
Laddu Muttai | 19-04-2020
1. அத்திபாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும். 2. வெங்காய சாறை கடுகு எண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர வாத மூட்டுவலி குணமாகும். 3. மூட்டுவலி, வீக்கம் குணமாக கணை பூண்டு இவைகளை வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்டிவர குணமாகும். 4. வாதநாராயணன் இலையை பொடி செய்து காலை, மாலை 1/4 கரண்டி சாப்பிட்டு வர மூட்டுவலி, இடுப்பு வலி குணமாகும். 5. பச்சை கற்பூரத்துடன், புதினா இலை சாறை கலந்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவ மூட்டு வலி நிற்கும். 6. பாகற்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூட்டுகள் உறுதிப்படும். அதனால் மூட்டுவலி குறையும். 7. முடக்கத்தான் சூப், வாதநாராயணன் கீரை சூப், அகத்திக்கீரை சூப், ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து சாப்பிடலாம். 8. கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவை மூட்டுவலிக்கு காரணம். எனவே அசைவ உணவை தவிர்த்து அதிக காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களைச் சாப்பிட்டு கொள்வது நல்லது. வரவும். 9. பச்சரிசி சாதத்தில் உடல் வலிமை உண்டாகும். சிறுநீர் எரிச்சலும், பித்தம் போகும். இதனுடன் சிறிது நெய் சேர்த்து உண்பது நல்லது. இல்லையென்றால் உஷ்ணத்தையும், வாயுவையும் உண்டாக்கும். 10. காசுக்கட்டி தேங்காய் எண்ணெயில் குழைத்து சேற்றுப் புண்ணுக்கு இடவும் அல்லது பழைய வெள்ளைத் துணியை (பருத்தி ஆடை) சுட்டு அச்சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவ குணமாகும். 11. மஞ்சள், வசம்பு வகைக்கு 5 கிராம், இதனை கைப்பிடி அளவு மருதோன்றி இலையுடன் சேர்த்து தண்ணீர் சேர்த்து மை போல அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் அடை போல கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து துணியினால் இறுகக் கட்டிவிடவும். இதனை படுக்கப் போகும் முன் செய்யவும். மறுநாள் காலையில் அவிழ்த்து விடவும்.இது போல் தொடர்ந்து 21 நாட்கள் கட்டி வந்தால் கால் ஆணி மறைந்து விடும். 12. மாவிலங்கப் பட்டையை நீர்விட்டுக் காய்ச்சி அதில் கரிய போளத்தை சேர்த்து அரைத்து கை, கால் மூட்டுகளில் பற்று போட்டு வர மூட்டு வீக்கம், வலி பிடிப்பு குணமாகும். 13. 50 கிராம் குங்குலியத்தை தூள் செய்து 500 கிராம் நல்லெண்ணெயில் காய்ச்சி பூசி வரவும். 14. உளுத்தம் பருப்புடன் முடக்கத்தான் கீரையை கூட்டி துவையல் செய்து உண்ண வாத நோய்கள் & மூட்டுகள் வலிமை பெறும். 15. பருவமடைந்த பெண்கள் & வலியுடன் பிரசவமான பெண்களுக்கு உளுந்துடன் சிறிது பனை வெல்லம் கருப்பட்டி சேர்த்து கஞ்சி அல்லது களி செய்து சூடாக காலை & மாலை சாப்பிட்டு வர இடுப்பு எலும்பு & உடல் பலன் உண்டாகும்.இதனை ஆறவைத்தோ, இரவில் சாப்பிடக்கூடாது.
Laddu Muttai | 19-04-2020
1. புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும். 2. நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். 3. வெந்தயத்தை வறுத்து இடித்து வெல்லம் சேர்த்து பிசைந்து 4 முறை சாப்பிட சீதபேதி குணமாகும். 4. வாழை பூவை கன்னன் நீக்கி, வேடு சட்டியில் அவித்து கசக்கி சாறு எடுத்து காலையில் 15 மில்லி சாப்பிட சீதபேதி குணமாகும். 5. மாதுளை தோல் பொடி, மாதுளை பட்டை சாறு, ஜாதிக்காய் பொடி, தேன் கலந்து 1 வாரம் சாப்பிட சீதபேதி முற்றிலும் குணமாகும். 6. அவரை இலை சாறு 25 மில்லி, 50 மில்லி பசுந்தயிர் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். 7. மலைவாழைபழத்தை நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். 8. கசகசாவை வறுத்து தூள் செய்து, நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட சீதபேதி குணமாகும். 9. சீதபேதி உள்ளவர்கள் நுங்கு மேல் தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். 10. குழந்தைகளுக்கு சீதபேதி இருந்தால் நாட்டுச் சர்க்கரையுடன் பசும் வெண்ணெய் சேர்த்து குழைத்து மூன்று வேளை கொடுத்து வர குணமாகும். 11. அவரை இலைச்சாறு 25 மில்லி எடுத்து இதனுடன் 50 மில்லி பசுந்தயிர் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். 12. சீதபேதி அஜீரணம் குணமாக ஆளி விதை என்று ஒன்று உள்ளது. அந்த விதையை அரைத்துச் சாப்பிட மேற்சொன்ன இரண்டு நோயும் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும். 2. மஞ்சள் வறுத்து காரியானவுடன் பொடியாக்கி இந்த பொடியை சாப்பிட்டு வர குடல் புண் எதுவானாலும் குணமாகும். 3. அகத்தி கீரையை உண்பதால் குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால் புழு அழியும். 4. வில்வ பழம் ஓட்டை உடைத்து சதையை எடுத்து சர்க்கரை சேர்த்து பிசைந்து காலையில் மட்டும் சில நாட்கள் சாப்பிட்டு வர குடல் புண், வாய்ப்புண் குணமாகும். 5. குங்கும பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள சுவாசகுழாய் அலர்ஜி, குடல் புண் குணமாகும். 6. நெல்லிக்கனி சாறு சிறிது, பசு கோமியம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும். 7. தினசரி வாழைப்பழம் சாப்பிட குடல் புண் சரும நோயை தடுக்கலாம். 8. மருதாணி இலையைப் பறித்து வந்து நீரில் ஊற வைத்து, அந்த கீரையைச் சாப்பிட்டு வர குடல் புண் குணமடையும். 9. ஆற குடல் புண் உள்ளவர்கள் காலை எழுந்ததும் பல் துலக்கியதும் இளநீர் தண்ணீர் அருந்த குடல் புண் ஆறும். 10. நெல்லிக்கனியின் சாறுடன் சிறிது கோமியம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும். 11. வாழைக்காய் பிஞ்சாக இருக்கும் போது பறித்து வந்து சமையல் செய்து சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும். 12. குங்குமப்பூ இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் தூளை தேனுடன் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும். 13. வில்வ மரத்தின் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும். 14. முட்டைகோஸை நறுக்கி சுத்தம் செய்து இரண்டு டம்ளர் நீர்விட்டு சிறிது உப்பும் போட்டு கொதிக்க வைத்து தண்ணீரைக் குடித்தால் குடல் புண் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020