1. அசல் விளக்கெண்ணெய் இரவில் அக்குள்களில் தேய்த்து கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடைவில் நீங்கும்.
2. காக்கிரட்டான் இலை சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து 1/2 கரண்டி சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து மிகுவியர்வை குணமாகும்.
3. இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவி வர உள்ளங்கை, கால் வியர்ப்பது நின்றுவிடும்.
4. உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக்காயைச் சேர்த்து வர தூர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.
5. காக்கணா செடியின் இலைகளின் சாறுடன் தேன் கலந்து இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வியர்வை அதிகம் வெளியேறுவதைத் தடுக்கலாம்.
6. வியர்வை நாற்றம் உள்ளவர்கள் சிறிது அமோனியாவைக் கலந்து தண்ணீர் குடித்து வர நாற்றம் போகும்.