Search for

சீதபேதி

Awesome Image
1. புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும். 2. நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். 3. வெந்தயத்தை வறுத்து இடித்து வெல்லம் சேர்த்து பிசைந்து 4 முறை சாப்பிட சீதபேதி குணமாகும். 4. வாழை பூவை கன்னன் நீக்கி, வேடு சட்டியில் அவித்து கசக்கி சாறு எடுத்து காலையில் 15 மில்லி சாப்பிட சீதபேதி குணமாகும். 5. மாதுளை தோல் பொடி, மாதுளை பட்டை சாறு, ஜாதிக்காய் பொடி, தேன் கலந்து 1 வாரம் சாப்பிட சீதபேதி முற்றிலும் குணமாகும். 6. அவரை இலை சாறு 25 மில்லி, 50 மில்லி பசுந்தயிர் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். 7. மலைவாழைபழத்தை நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். 8. கசகசாவை வறுத்து தூள் செய்து, நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட சீதபேதி குணமாகும். 9. சீதபேதி உள்ளவர்கள் நுங்கு மேல் தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். 10. குழந்தைகளுக்கு சீதபேதி இருந்தால் நாட்டுச் சர்க்கரையுடன் பசும் வெண்ணெய் சேர்த்து குழைத்து மூன்று வேளை கொடுத்து வர குணமாகும். 11. அவரை இலைச்சாறு 25 மில்லி எடுத்து இதனுடன் 50 மில்லி பசுந்தயிர் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். 12. சீதபேதி அஜீரணம் குணமாக ஆளி விதை என்று ஒன்று உள்ளது. அந்த விதையை அரைத்துச் சாப்பிட மேற்சொன்ன இரண்டு நோயும் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020