காயம்பட்ட இடத்தில் ஏற்கனவே இருந்த சருமம் சேதமாகி இருக்க புதிதாக செல்கள் வளரும் போது அந்த இடத்தில் புரோட்டின் அமைப்பு மாறுபடுவதால் தழும்பாக தனித்து தெரிகிறது. அதை இயற்கையான பொருட்கள் கொண்டு சரி செய்யும் வழிகள். இதற்கு தேவையான பொருட்கள், கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், மூன்றையும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக்கொண்டு நன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்னர் உடலில் எங்கு எங்கு தழும்புகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இதனை தடவிவந்தால் விரைவில் தழும்புகள் மறையும். கற்றாழை ஜெல்லை தடவி வருவதன் மூலமும் தழும்புகள் விரைவில் குணமடையும்.