புதிதாக குழந்தை பெற்ற குடும்பத்தில் இருப்பவர்களின் பிரதான பிரச்சனை , குழந்தையின் அழுகை. ஏன் அழுகிறது ? என்னவாக இருக்கும் எப்படி அழுகையை நிறுத்துவதென்று பலருக்கு தெரிவதில்லை. குறிப்பாக இரவு நேரத்தில் குழந்தை அழ தொடங்கினால் பெற்றோர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை . அப்படி எதனால் அழுகிறது என்ற காரணம் தெரியாத அழுகைகளுக்கான காரணம் பற்றிய விவரம் தெரிந்து அதற்குன்டான வழியை பின்பற்றி குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். 1. குழந்தைகள் பாலுக்கு மட்டும் அழுவதில்லை, ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகள் பால் குடிக்காமல் அழுதாள் தண்ணீர் தாகம் ஏற்பட்டு இருக்கும். அப்பொழுது தண்ணீரை கொடுங்கள் பிறகு குழந்தை அழுகையை நிறுத்தி விடும். 2. ஒரு வேலை இரவு நேரங்களில் விடாமல் அழுகிறது என்றால், சிறுநீர் கழித்து வயிறு முதுகு நனைந்து அவர்கள் கசகச என்று உணர்வார்கள். நீங்கள் உடனே அவர்கள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி , உலர்ந்த ஆடைகளை அணிவித்து விட்டால் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிடும்.ஒருவேளை டைப்பர் போடுபவர்கள் என்றால் அடிக்கடி டைப்பரை சோதித்துப் பார்த்து மாற்றவும். டைபர் அதிக எடை ஆனதும் அசௌகரியமாக உணர்வார்கள். சில குழந்தைகளுக்கு டயப்பர் அணிவதால் காற்றோட்டம் இன்றி குழந்தைகள் அவதிப்படுவார்கள் அதனை உடனே கழற்றி விடவும். 3. வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு இறுக்கமான ஆடைகளை அணிவதாலும் அழுவார்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். வெயில் காலத்தில் அதிக தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கவும்.சூடு பிடித்து சிறுநீர் கழிக்க அழுவார்கள் அதனால் அதிக தண்ணீர் கொடுக்கவும். 4. உடல் சூட்டினால் ஏற்படும் உபாதைகளை குழந்தைகளால் விவரிக்க முடியாது ,வயிற்று வலியினால் அல்லது வெயில் காலத்தில் உடல் சூட்டினால் சூடு தாங்க முடியாமல் அழுகிறார்கள் என்றால் தலையின் உச்சியிலும், தொப்புலிலும், பிறப்புறுப்பில்(கொஞ்சமாக) விளக்கெண்ணையை வைக்கவும். சிறுது நேரத்தில் உடல் சூடு தணிந்து அழுகையை நிறுத்திவிடுவார்கள். 5. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் சில நேரங்களில் வேறு உணவுகளை ஊட்டும் பொழுது அழுகிறார்கள் என்றால், அவர்கள் தாய்ப்பால் குடிக்க ஏங்குகிறார்கள் என்று அர்த்தம் அந்த நேரத்தில் தாய்மார்கள் தங்களது மார்பில் குழந்தைக்கு பாலை குடிக்க விடுவதால் குழந்தைகள் அழுகையை நிறுத்தும். 6. திடீரென்று வீறிட்டு அழுதால் பூச்சி கடித்து இருக்கிறதா என்பதை உடனே பார்க்கவும் அல்லது உடலில் ஏதேனும் சிறு காயங்கள் உள்ளதா என பார்த்து மருந்து போடவும். 7. குழந்தைகள் என்ன செய்தும் இடைவிடாமல் அழுதால் காற்றோட்டமுள்ள இடத்திற்கு தூக்கி சென்று வேடிக்கை காட்டுங்கள்.சில குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுவார்கள் அச்சமயத்தில் காற்றோட்டம் உள்ள பகுதியில் வெட்ட வெளிச்சத்தில் வேடிக்கை காட்டுங்கள். குழந்தையை அதிக காற்று வீசும் விசிறியின் அடியில் படுக்க வைக்க கூடாது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். 8. குழந்தை தூக்கம் வந்தும் தூங்க அவதிப்படுகிறார்களா அப்பொழுது மடியிலும் தூங்காமல் தோலிலும் தூங்காமல் வழக்கத்திற்கு மாறாக அழுகிறார்கள் என்றால் குழந்தை தூங்கும் தொட்டில் போட்டு தூங்க வைக்கவும். இதையெல்லாம் தாண்டி குழந்தை விடாமல் அழுதுகொண்டிருந்தாள் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.