பிறந்த குழந்தை ஏன் விடாமல் அழுகிறது? குழந்தை தாயின் பாதுகாப்பில், அதாவது பனிக்குட நீரில் எப்பொழுதும் கதகதப்பாக கருப்பையினுள் இருக்கும். குழந்தை எப்பொழுதும் தன் தாயின் இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டு இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாயின் இதயத்துடிப்பு கேட்காமல் இருக்கும் அதேசமயம் பணிக்கொட நீரில் இருந்த கதகதப்பு வெளியில் வந்தவுடன் குழந்தையின் உடல் மாற்றத்தை உணரும் அதனால் குழந்தை பயத்துடனும் அருகில் தாய் இல்லாததை உணர்ந்து குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. தாயின் கர்ப்பப் பையினுள் இருந்து வெளியே எடுத்த உடன் குழந்தையின் நுரையீரல் ஆனது முதன்முதலாக வெளி காற்றினை சுவாசிக்கும் பொழுது அழத் தொடங்குகிறது இதன் காரணமாக குழந்தைக்கு பிராண வாயு நன்றாக கிடைக்க, குழந்தை நன்றாக அழுவது அவசியம். பிறந்த குழந்தையின் அழுகையை எப்படி நிறுத்த வேண்டும்? ஒரு வேலை குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தாள் குழந்தையின் அழுகையை நிறுத்த மேலே குறிப்பிட்டது போல், தாய் குழந்தையை தனது இதய துடிப்பு நன்றாக கேட்கும்படி நெஞ்சோடு அணைத்து வைத்துக்கொள்ள வேண்டும் . அப்படி அணைத்து வைத்துக்கொள்வதினால் குழந்தை கருப்பையினுள் இருப்பதை போன்று கதகதப்பாக பாதுகாப்பாக உணரும். இடைவிடாமல் குழந்தை அழுது கொண்டிருந்தாள் இப்படி சிறுது நேரம் வைத்து கொண்டிருந்தாள் சீக்கிரமாக குழந்தை அழுகையை நிறுத்திவிடும். குழந்தையின் 38 ,39 வது வாரத்தில் கருவினில் இருக்கும்பொழுது கடைசியாக நுரையீரல் வளர்ச்சி நடைபெறும் தாயின் வயிற்றில். குழந்தை பிறந்தவுடன் முதலில் மிக வேகமாக செயல்படுவது நுரையீரலே ஆகும் காரணம் முதன்முதலில் வெளிக்காற்றை சுவாசிக்க நுரையீரல் மிகவும் பங்களிக்கிறது.