உங்கள் குழந்தை மலம் பச்சை நிறத்தில் இருக்கிறதா? குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழிக்க காரணம் முதன்முறையாக ஊரும் தாய்ப்பால் ஆகும்.குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழிப்பது சாதாரணம் தான் இதனால் தாய்மார்கள் பயப்படத் தேவையில்லை. குழந்தை சிவப்பு நிறம் அல்லது சாம்பல் நிறத்தில் மலம் கழிந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.மேலும் செரிமான பிரச்சனைனால் குழைந்தை பச்சை நிறத்தில் மலம் கழிக்கும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒரு நாள் அல்லது இரண்டு மூன்று நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பது இயல்பே ஆகும் இதனால் பயப்பட தேவையில்லை. ஒரு வாரம் குழந்தை மலம் கழிக்கவில்லை என்றால் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் செல்லவும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஏழு முறை மலம் கழிப்பது இயல்பே ஆகும். குழந்தை நீர் மாதிரி மலம் கழித்தால் குழந்தையின் உடலில் நீர் வற்றாமல் இருக்க தாய்மார்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதிகமாக நீர் மற்றும் சளி போன்று கலந்து மலம் கழிந்து கொண்டிருந்தாள் தாமதிக்காமல் குழந்தையை மருத்துவரிடம் கூட்டி செல்லவும்.