தலையில் மயிர்களுக்கிடையே மச்சம் இருக்கக் கூடும். ஆனால், அவைகள் உள்ள இடத்தை மயிர்களை நீக்கிக் குறிப்பாகச் சோதனை செய்து பார்த்தால் தான் தெரியும். "தலையில் வலது பக்கத்தில் மச்சம்" இருந்தால், அவர்கள் அரசர்களாகவும், அல்லது அரசர்களுக் குரிய அதிகாரங்களையும் கடமைகளையும் கொண்ட தற்கால கவர்னர்கள், கலெக்டர்கள் போன்றவர்களாகவும் திகழ்வார்கள். "மேற்கண்ட மச்சம் தலையில் இடது புறத்தில் இருந்தால்" மக்களால் வணங்கப்படும் உயர்ந்த மடாதிபதிகளாகவோ, அஷ்டாங்க யோக வித்தையைக் கற்ற யோகிகளாகவோ திகழ்வார்கள். இல்லற வாழ்க்கையைக் காட்டிலும் துறவறம் மேற் கொண்டவர்களே இந்த மச்சத்துக்குரியவராவர். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.