பொது:அக்குள்களில் எங்கு மச்சம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் முன்னேற்றம் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒரே சீராக இருப்பார்கள். "வலது அக்குளில் மச்சம்" இருந்தால் பிறவியிலேயே செல்வச்சீமானாகத் திகழ்வான். வாழ்க்கைகுரிய வசதிகள் அனைத்தும் படைத்திருப்பான். சுற்றத்தாருடனும் நண்பருடனும் பகிர்ந்துண்ணும் பண்பாளன். தனக்கேற்ற வாழ்க்கைத் துணைவியின் சேர்க்கையினால் வாழ்க்கை இனிக்கும். மிகவும் நல்லவன் என்று எல்லோராலும் பாராட்டப்படவான். "இடது அக்குளில் மச்சம்" இருந்தால் மேற்கண்ட வகைக்கு எதிர்மறையாக இருப்பான். ஏழையாக பிறந்து ஏழையாகவே முடிவான். வயது முதிர்ந்த பிறகே திருமணம் நடைபெறும். நெறியற்ற வாழ்க்கையாளனாக ஆயுள் முழுவதும் கஷ்டங்களையே அனுபவித்து அற்பாயுளில் முடிவான். "வலது அக்குளுக்கும் காதுக்கும் இடையே மச்சம் இருந்தால்" வாழ்க்கை ஒரு சீராக அமைந்திருக்காது. வாழ்க்கைத் தொடக்கத்தில் ஏழையாக இருந்து நடுவில் நன் முயற்சியினால் சகல வசதிகளும் பெற்றிருந்தாலும், நடுவயதில் தன் இஷ்டப்படி செலவு செய்து மிக்க ஏழ்மை நிலையை அடைவான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.