Macham-palangal | | Tamil Best Beauty tips site | Laddu muttai அக்குளில் மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு macham-palangal-machapuraanam

அக்குளில் மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு

macham-palangal-machapuraanam

பொது:அக்குள்களில் எங்கு மச்சம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் முன்னேற்றம் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒரே சீராக இருப்பார்கள். "வலது அக்குளில் மச்சம்" இருந்தால் பிறவியிலேயே செல்வச்சீமானாகத் திகழ்வான். வாழ்க்கைகுரிய வசதிகள் அனைத்தும் படைத்திருப்பான். சுற்றத்தாருடனும் நண்பருடனும் பகிர்ந்துண்ணும் பண்பாளன். தனக்கேற்ற வாழ்க்கைத் துணைவியின் சேர்க்கையினால் வாழ்க்கை இனிக்கும். மிகவும் நல்லவன் என்று எல்லோராலும் பாராட்டப்படவான். "இடது அக்குளில் மச்சம்" இருந்தால் மேற்கண்ட வகைக்கு எதிர்மறையாக இருப்பான். ஏழையாக பிறந்து ஏழையாகவே முடிவான். வயது முதிர்ந்த பிறகே திருமணம் நடைபெறும். நெறியற்ற வாழ்க்கையாளனாக ஆயுள் முழுவதும் கஷ்டங்களையே அனுபவித்து அற்பாயுளில் முடிவான். "வலது அக்குளுக்கும் காதுக்கும் இடையே மச்சம் இருந்தால்" வாழ்க்கை ஒரு சீராக அமைந்திருக்காது. வாழ்க்கைத் தொடக்கத்தில் ஏழையாக இருந்து நடுவில் நன் முயற்சியினால் சகல வசதிகளும் பெற்றிருந்தாலும், நடுவயதில் தன் இஷ்டப்படி செலவு செய்து மிக்க ஏழ்மை நிலையை அடைவான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.




macham-palangal-machapuraanam
பொது: மேலுதடு, கீழுதடு என்று உதடுகள் இரண்டல்லவா? இவைகளில் எந்த உதட்டில் மச்சம் இருந்தாலும், காம உணர்ச்சி அதிகமா உள்ளவனாக இருப்பான். அழகான பொருள்களை விரும்பி வாங்குவான். "மேலுதடு மீது மச்சம்" இருந்தால் வாழ்க்கை வசதிகள் நன்கு பெற்றவனாகவும் மிக்கக் காமப்பற்றுள்ளவனாகவும் இருப்பான். அந்த மச்சம் மேலுதட்டின் உட்புறமாக இருந்தால் ரகசிய வித்யைகளை அறிந்தவன். மந்த்ர சாஸ்திரங்களில் வல்லவன். "கீழுதடு மீது மச்சம்" உள்ளவன் மிகவும் வறுமை வருந்துபவன். இத்தகையவர்கள் பலர் பிரசங்கங்கள் செய்து வாழ்க்கையை நடத்துவார்கள். அதிகமாக உண்பவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள் "இந்த மச்சம் கீழுதட்டின் உட்புறம்" இருந்தால் எல்லோராலும் வெறுக்கத்தக்க வகையில் வாழ்க்கை நடத்துவார்கள் தீய வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள். சிலர் பிறர் அளிக்கும் தானங்களை வாங்கி வயிறு வளர்ப்பவர்கள். சிலர், மதுக்களை அருந்தி, குடிகாரர்கள் என்று இகழப்படுவார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
"வலது இடுப்பில் மச்சம்" இருந்தால் மிகவும் ஏழையாகப் பிறந்து ஏழையாகவே மடிவான். "இடது இடுப்பில் மச்சம்" இருந்தால் காமப்பற்று அதிகமுள்ளவனாகவும், வேசி லோலனாகவும் இருந்து அகாலத்தில் அழிந்து போவான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
"ஆள்காட்டி விரல் மீதாவது, அல்லது அந்த விரல் நகத்தின் மீதாவது" வெளுப்பான மச்சம் இருப்பது நல்லது. இந்த நிலையில் எதிர்பாராத வகையில் தனலாபமுண்டாகும் பதவிகளைப் பெறுவார்கள். அந்நிலையில் சிலர் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வுகளைப் பெறுவதுண்டு. "வலது கை ஆள்காட்டி விரல் மீது மச்சம்" இருந்தால், கெட்ட குணங்களுக்கெல்லாம் இருப்பிட மாவான். திருடு, பித்தலாட்டம், ஏமாற்று வித்தைகள் புரிந்து எல்லோராலும் இகழப்படுவான். அடிக்கடி சிறைச்சாலைக்குச் சென்று கொண்டிருக்கும் வாய்ப்பு நிறைந்தவன். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
"ஆண்குறியின் மேல்புறம் மச்சம்" இருப்பின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதாவது, இளமையில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் முதுமையில் செல்வமெல்லாம் கரைந்து. மிகவும் ஏழ்மையை அனுபவிப்பார்கள். அப்படியின்றி, இளமையில் ஏழ்மையை அனுபவிப்பவர்கள் வயது ஏற ஏறச் செல்வமும் வளர்ந்து முதுமையில் சகல போகங்களையும் அனுபவிப்பார்கள். பொதுவாக ஆண்குறி மீது மச்சம் உள்ளவர்கள் காம அதிகமாக இருப்பவர்கள். அதனால் வாழ்க்கை நெறியில் அவர்கள் தவறக்கூடும். "ஆண்குறியின் கீழ் புறம் மச்சம்" இருந்தால், வாழ்நாள் முழுவதும் ஏழ்மையையே அனுபவிப்பார்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் இவர்களுக்குத் தோல்வியே உண்டாகும் நன்கு வளர்ச்சியடைந்த தம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வசதியின்றி வருந்துவார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
மச்சங்கள் அவரவர் பிறந்தது முதல் எக்காலத்திலும் உடலிலிருந்து மறையாது மற்றும் உடல் பெருத்தாலும் இவை உருவத்தில் பெரிதாகவோ சிறிதாகவோ மாறாதவை. சொறி, சிரங்கு, காயங்கள், கொசுக்கடி, பூச்சிக் கடி, வைசூரி வடுக்கள் போன்றவைகளைப் பார்த்து மச்சம் என்று ஏமாறக்கூடாது. அவை அவ்வப்பொழுது தோன்றி மறையக்கூடியவை. எனவே, அவரவர்கள் தமது உடலின் மீது பல ஆண்டுகளாகியும் மறையாமலிருக்கும் நிலையான அடையாளங்களையே மச்சம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். சில பொது விதிகள்: 1. ஆண், பெண் இருபாலாருடைய உடலிலும் மச்சங்கள் இருக்கும். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மச்சங்களை தாமாகவோ, நண்பர்களைக் கொண்டோ பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். 2. ஆண்களுக்கு உடலின் வலது புறத்திலுள்ள பகுதிகளில், அதாவது: வலது பாதம், வலது தொடை, வலது மார்பு போன்ற பகுதிகளில் உள்ள மச்சங்கள்,பொதுவாக நன்மையளிப்பவைகளாகவும் இடது பக்கத்தில் உள்ள மச்சங்கள் தீமையளிப்பனவாகவும் இருக்கும். எனவே ஆண்களுக்கு வலது பக்கங்களில் உள்ள மச்சங்களைப்பற்றியே இந்நூல் கூறும். 3. பெண்களுக்கு உடலின் இடது பக்கத்திலுள்ள மச்சங்கள், அதாவது இடது பாதம், இடது தொடை, இடது கண், இடது காது போன்ற பகுதிகளிலுள்ள மச்சங்கள் நல்ல பலனையும் வலது பக்கத்திலுள்ளவை தீய பலனையும் அளிப்பவை. இந்தப் பொது நியமத்தை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020