பொது: மேலுதடு, கீழுதடு என்று உதடுகள் இரண்டல்லவா? இவைகளில் எந்த உதட்டில் மச்சம் இருந்தாலும், காம உணர்ச்சி அதிகமா உள்ளவனாக இருப்பான். அழகான பொருள்களை விரும்பி வாங்குவான். "மேலுதடு மீது மச்சம்" இருந்தால் வாழ்க்கை வசதிகள் நன்கு பெற்றவனாகவும் மிக்கக் காமப்பற்றுள்ளவனாகவும் இருப்பான். அந்த மச்சம் மேலுதட்டின் உட்புறமாக இருந்தால் ரகசிய வித்யைகளை அறிந்தவன். மந்த்ர சாஸ்திரங்களில் வல்லவன். "கீழுதடு மீது மச்சம்" உள்ளவன் மிகவும் வறுமை வருந்துபவன். இத்தகையவர்கள் பலர் பிரசங்கங்கள் செய்து வாழ்க்கையை நடத்துவார்கள். அதிகமாக உண்பவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள் "இந்த மச்சம் கீழுதட்டின் உட்புறம்" இருந்தால் எல்லோராலும் வெறுக்கத்தக்க வகையில் வாழ்க்கை நடத்துவார்கள் தீய வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள். சிலர் பிறர் அளிக்கும் தானங்களை வாங்கி வயிறு வளர்ப்பவர்கள். சிலர், மதுக்களை அருந்தி, குடிகாரர்கள் என்று இகழப்படுவார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.