மச்சங்கள் அவரவர் பிறந்தது முதல் எக்காலத்திலும் உடலிலிருந்து மறையாது மற்றும் உடல் பெருத்தாலும் இவை உருவத்தில் பெரிதாகவோ சிறிதாகவோ மாறாதவை. சொறி, சிரங்கு, காயங்கள், கொசுக்கடி, பூச்சிக் கடி, வைசூரி வடுக்கள் போன்றவைகளைப் பார்த்து மச்சம் என்று ஏமாறக்கூடாது. அவை அவ்வப்பொழுது தோன்றி மறையக்கூடியவை. எனவே, அவரவர்கள் தமது உடலின் மீது பல ஆண்டுகளாகியும் மறையாமலிருக்கும் நிலையான அடையாளங்களையே மச்சம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். சில பொது விதிகள்: 1. ஆண், பெண் இருபாலாருடைய உடலிலும் மச்சங்கள் இருக்கும். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மச்சங்களை தாமாகவோ, நண்பர்களைக் கொண்டோ பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். 2. ஆண்களுக்கு உடலின் வலது புறத்திலுள்ள பகுதிகளில், அதாவது: வலது பாதம், வலது தொடை, வலது மார்பு போன்ற பகுதிகளில் உள்ள மச்சங்கள்,பொதுவாக நன்மையளிப்பவைகளாகவும் இடது பக்கத்தில் உள்ள மச்சங்கள் தீமையளிப்பனவாகவும் இருக்கும். எனவே ஆண்களுக்கு வலது பக்கங்களில் உள்ள மச்சங்களைப்பற்றியே இந்நூல் கூறும். 3. பெண்களுக்கு உடலின் இடது பக்கத்திலுள்ள மச்சங்கள், அதாவது இடது பாதம், இடது தொடை, இடது கண், இடது காது போன்ற பகுதிகளிலுள்ள மச்சங்கள் நல்ல பலனையும் வலது பக்கத்திலுள்ளவை தீய பலனையும் அளிப்பவை. இந்தப் பொது நியமத்தை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.