"இடது பட்டக்சில் மச்சம்" இருந்தால், பாக்யசாளியாகவும், வாழ்க்கைக்குரிய எல்லா வசதிகளும் பெற்றவளாகவும், நல்ல குணவதியாகவும் திகழ்வள். கணவனுக்கேற்ற மனைவியாகவும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் புகழ் தேடித் தருபவளாகவும் இருப்பாள். "வலது பட்டக்சில் மச்சம்" இருந்தால், மேற்கண்ட பலனுக்கு மாறாக இருக்கும். மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். வீடு வாசல்களின்றியும், மக்களின்றியும் உடலுழைத்து அரைவயிறு உண்பவளாகவும் கணவனுக்கு இஷ்டமானவளாகவும் இருப்பால். "இரு பீடங்களின் இடையே மச்சம்" இருந்தால், ஏழ்மையின் உருவாக மிகவும் கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்துவாள். "பெண் குறியின் வலது புறம் மச்சம்" இருந்தால், உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக, ராணியாகவோ இருப்பாள். இவளது மகனும் அரசனாக ஆவான் என்று சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.