1. கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
2. முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் ஆகும்.
3. கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும்.
4. மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து தொடர்ந்து தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.
5. வழுக்கையில் முடி வளர வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.
6. நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வர முடிவளரும்.
7. சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி அடர்த்தியாகவும், நீண்டும் வளரும்.
1. ஆலமரத்தின் இளம்பிஞ்சு, வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாக வளரும்.
2. கருப்பு முடியாக மாற காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும். |
3. நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை றத்திற்கு மாறும். நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றல் சாப்பிடலாம்.
4. தாமரை பூவை தண்ணீரில் கஷாயம் செய்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வர இளநரை மறையும்.
1. வெந்தயம் குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து 1 வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
2. நெல்லிக்காய் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வர முடி உதிர்வது நின்று விடும். கண்கள் குளிர்ச்சியடையும்.
3. வேப்பிலை - 1 கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்த நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். பேன் நீங்கும்.