வெள்ளரிக்காயானது மனித உடம்பிற்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் அளிக்கக் கூடிய ஒன்றாகும். உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்கு தேவையான அனைத்து மூலங்களும் வெள்ளரிக்காயில் உள்ளது.கேரட்டை போலவே வெள்ளரிக் காயையும் தோலை சீவாமல் தான் சாப்பிடவேண்டும். ஏனெனில் அதன் தோலுக்கு நெருக்கமாக தான் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் ஆனது பொதுவாகவே மனித உடலில் ஏற்படும் பிணிகளுக்கு மருந்தாக உள்ளது. வெள்ளரியை எப்பொழுதும் சமைத்து சாப்பிடக்கூடாது சமைக்காமல் சாப்பிட்டால் தான் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் கிடைக்கும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * மலச்சிக்கல் சரி செய்யும் * வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் * கீல்வாதம் சரிசெய்யும் * சிறுநீர் உபாதைகளை போக்கும் * காலரா தாக வறட்சியைப் போக்கும் * சரும கொப்பளங்களை சரிசெய்யும் * அழகு சாதனமாக பயன்படும்