1. வாந்தியை நிறுத்த துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும். 2. பித்த வாந்தியை நிறுத்த வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும். 3. துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும். 4. வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும். 5. எலும்மிச்சம் இலைகளை அரைத்து சாறு எடுத்து தண்ணீரும் சிறிது உப்பும் போட்டு பருகினால் வாந்தி உடனே நிற்கும். 6. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த பிரயாணத்தின் போது வாந்தி வருகிறதா நீங்கள் தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர பிரயாணத்தின் போது வாந்தி வராது. 7. நார்த்தங்காய் இலையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் தணிந்து வாந்தி வருவது நின்று விடும். 8. புதினா இலையை வதக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வெல்லம் கலந்து வடிகட்டி சாப்பிட செரியாமை, வாந்தி பேதி குணமாகும். 9. புதிய மண் சட்டியை அடுப்பில் வைத்து இரண்டு காய்ந்த மிளகாயை போட்டு கறுக்க வறுத்து மிளகாயை எடுத்து அந்தச் சட்டியில் 3 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அந்நீரை பருகி வர குணமாகும். 10. களாக்காயை சாப்பிட்டால் பித்த சம்பந்தமான நோய் நீங்குவதுடன் பித்த வாந்தியை நிறுத்தும். 11. வில்வ வேரை பறித்து வந்து சுத்தம் செய்து மைய அரைத்து பாலுடன் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, வாந்தி குணமாகும்.