தலைவலி | | Tamil Best Beauty tips site | Laddu muttai தலைவலி குணமாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

தலைவலி குணமாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

1. குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும். 2. அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும். 3. முள்ளங்கி சாறு சாப்பிட தலைவலி, இருமல் குணமாகும். 4. திருநீற்று பச்சிலை சாறு, தும்பை சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச மண்டையடி தீரும். தலைவலி பாரம் குணமாகும். 5. வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ தலைவலி குணமாகும். 6. விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி அகலும். 7. எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி போகும். 8. தேத்தாங் கொட்டையுடன், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுபோட ஒற்றை தலைவலி குணமாகும். 9. மருக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டுப்போட உடனே தலைவலி நிற்கும். 10. மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே குணமாகும். 11. மிளகை மைய தேய்த்து எடுத்து அதை எலுமிச்சம் பழச் சாற்றில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும். 12. குங்குமப்பூ வாங்கி வந்து தாய்ப்பால் விட்டு மைய உரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே நிற்கும். 13. முற்றிய வெற்றிலையின் நுனி பகுதியை சிறிது எடுத்து நெற்றிப்பொட்டின் இருபுறமும் ஒட்டினால் தலைவலி குணமாகும். 14. எட்டிக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும். 15. நாட்டு வெங்காயம் இரண்டு, மூன்று மட்டும் பச்சையாகவே உரித்து சாப்பிட்டால் , கொண்டைக் கடலையை லேசா வறுத்து மென்று சாப்பிட்ட பின் பால் அருந்தி வர, தலைவலி, தலைபாரம், இருமல் தீரும். 16. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும் 17. துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுபோட தலைவலி குணமாகும். 18. துளசி இலைசாறு, வில்வ இலை சாறு வகைக்கு 100 மிலி எடுத்து, அத்துடன் 200 மிலி தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சாறு சுண்டியபின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும். 19. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் பயப்படாமல் உண்ணலாம் என்ற பழமொழிக்கு இணங்க ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்துப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, இதனை இரவில் தூங்கப் போகிறதுக்கு முன்பே மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே இருமல், தலைவலி உடனே போய்விடும் 20. எளிமையான மருந்து மிளகு ஊசியால் குத்தி தீயில் கட்டு அதனுடைய புகையை மூக்கு மூலம் உள்ளுக்கு இழுத்தாலே ஜலதோஷம், தலைவலி போய்விடும். 21. இஞ்சிச் சாறு 50 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி, சீசாவில் பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த தைலத்தை நன்றாகத் தேய்த்து 20 நிமிடம் ஊறியதும், பயத்தமாவு & அரப்புத் தூள் தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைவலி இந்தத் தைலம் குணப்படுத்தும்.




pasalai-keerai-payangal-in-tamil

Tag : vegetable |

பசலைக்கீரை சாப்பிடுவதன் மூலம் சக்தி குறைவு மற்றும் ஆண்மை கோளாறுகளை சரி செய்யலாம். மேலும் ரத்த சோகை நரம்பு சோர்வு நரம்பு பலவீனம் இவற்றைப் போக்குவதிலும் பசலைக்கீரை வல்லது. பசலைக் கீரையில் அயர்ன் சத்து அதிகமாக உள்ளது எனவே கர்ப்பிணி பெண்களுக்கு இவை புதையல் போன்றது. பசலைக் கீரையின் சாற்றை எடுத்து வாய் கொப்பளித்து வர தொண்டை பின்பற்றும் எரிச்சலானது விரைவாக சரியாகும். பசலைக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. மலச்சிக்கலை சரிசெய்யும் 2. பார்வைக்கோளாறுகளுக்கு உகந்தது 3. ரத்த சோகையை தடுக்கும் 4. பல் உபாதையை சரிசெய்யும் 5. சிறுநீர் கோளாறுகளை சரி செய்யும் 6. சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் 7. தாது விருத்தியாகும்
Laddu Muttai | 10-06-2020
puthina-payangal-in-tamil

Tag : vegetable |

புதினா பசி உணர்ச்சியை தூண்டும் மேலும் உடம்பிற்கு குளுமை தரக்கூடிய கீரை வகைகளில் ஒன்று. இது ரத்தத்தை தூய்மை செய்யும் குமட்டல் வாந்தி நிறுத்தம் வாய் நாற்றம் போக்குவது வயிற்று உப்புசம் வராமல் தடுப்பது புதினாவின் முக்கிய பண்புகள் ஆகும். புதினா சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. ஜீரண கோளாறை சரிசெய்யும் 2. சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் 3. வாய் உபாதைகளை தடுக்கும் 4. தொண்டை கரகரப்பை நீக்கும் 5. முகம் பொலிவுற செய்யும் 6. கருத்தடையாகவும் பயன்படும்
Laddu Muttai | 10-06-2020
sandi-keerai-payangal-in-tamil

Tag : vegetable |

லெட்டூஸ் எனப்படும் சண்டிக்கீரை ஆனது பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடக்கூடிய கீரை வகையாகும். இது இரத்தத்தைச் சுத்தமாக்குவது மூளைக்கு விழிப்புணர்வை தரும். சண்டி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. மலச்சிக்கலை சரிசெய்யும் 2. தூக்கமின்மையை சரி செய்யும் 3. நீரிழிவுக்காரர்களுக்கு நல்ல உணவு 4. தாய்ப்பால் சுரக்க வழிவகை செய்யும் 5. பசி உணர்வை அதிகரிக்கும் 6. உடலுக்கு குளிர்ச்சியை தரும்
Laddu Muttai | 10-06-2020
vengayam-payangal-in-tamil

Tag : vegetable |

சிவப்பு வெங்காயத்தை விட வெள்ளை வெங்காயங்கள் மருத்துவ குணத்தில் மிகச் சிறப்புடையவை.வதக்கிய மற்றும் சமைத்த வெங்காயங்கள் ஆனது ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும் பச்சையாகவே வெங்காயம் உண்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். வெங்காயம் ஆனது சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது கபத்தை நீக்கும் மேலும் சருமங்களில் நிறங்களை சிவப்பாக்கும். வெங்காயத்தின் விதையானது ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகமாக்கும். மேலும் சிறுநீர் சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடும். வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ குணங்கள் 1. சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் 2. பல் உபாதைகளை போக்கும் 3. இரத்தசோகையை சரிசெய்யும் 4. மோகத்திற்கு உதவும் 5. சரும பிரச்சனைகளை சரிசெய்யும் 6. காது கோளாறுகளை போக்கும். 7. காலரா விற்கு சிறந்த நிவாரணி.
Laddu Muttai | 10-06-2020
inji-payangal-in-tamil

Tag : vegetable |

இஞ்சியானது வயிற்றுப் புண்ணுக்கு சிறந்த நிவாரணியாகும். சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இஞ்சியானது முக்கிய பங்காற்றுகிறது. பல்வேறு பொருட்களில் நறுமணப் பொருளாக இஞ்சி உபயோகப்படுத்தப்படுகிறது , மேலும் எஸன்ஸ் தயாரிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்ற. இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. ஜீரண மண்டல கோளாறுகளை சரி செய்யும் 2. இருமல் மற்றும் ஜலதோஷம் அதை சரிசெய்ய முக்கிய பங்காற்றுகிறது 3. சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது 4. வலி நிவாரணியாக பயன்படுகிறது 5. விந்து முந்துதல் சரியாக முக்கிய பங்காற்றுகிறது 6. மாதவிடாயினால் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது
Laddu Muttai | 10-06-2020
vendaya-keerai-payangal-in-tamil

Tag : vegetable |

வெந்தயக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் 1. வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலி குணம் பெற பயன்படுகிறது. 2. பித்த காய்ச்சல் குணம் பெற வெந்தயக்கீரை பயன்படுகிறது. 3. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மேலும் சிறிய அளவிலான பேதிக்கு வெந்தயக்கீரை பயன்படுகிறது. 4. வெந்தயக்கீரையை மைய அரைத்து குளிக்கும் போது தலைக்கு தேய்த்தால் முடி நீளமாக வளரும். முடி மென்மையாவதோடு முடியின் இயல்பான நிறம் காக்கப்படும். 5. நீரிழிவு நோயின் ஆரம்ப காலகட்டத்திற்கு வெந்தயக் கீரையின் சாறு நல்ல பயனை தரும் 6. இரவு தூங்குவதற்கு முன் தினமும் வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் வராது மேலும் முகத்தில் உள்ள வறட்சி கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும். இதனால் முகத்தின் நிறம் மேம்படும் இளமையாக இருக்க செய்யும். 7. வெந்தயக்கீரை சாருடன் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் மேலும் உறக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். 8. வயிற்று குடல் பகுதியில் ஏற்படும் வாயு சார்ந்த உபத்திரம் அஜீரணம் ஆகியவற்றை சரி செய்யும். ஈரல் மந்தம் மற்றும் வாய்ப் புண்ணையும் குணப்படுத்தும். 9. வெந்தயக்கீரையை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாதம் போன்ற நோய்களிலிருந்து முற்றிலுமாக நிவாரணம் கிடைக்கும். 10. ரத்த உற்பத்திக்கு வெந்தயக்கீரை அளவே பெரும்பங்காற்றுகிறது மாதவிடாய் காலங்களில் ரத்தசோகை பாதிக்கப்பட்டிருந்தால் கூட்டு சமைத்து சாப்பிட வேண்டும். 11. வெந்தயக் கீரையை கடைந்து தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் உள்ள புண்கள் குணமடையும் மேலும் கூட்டு செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக வைக்கும் மூல நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக வெந்தயக்கீரை உள்ளது. 12. உடம்பில் உள்ள சூரிய மற்றும் சிரங்கைக் குணப்படுத்தும் மேலும் கண்பார்வையும் தெளிவு பெறும்.
Laddu Muttai | 10-06-2020
murungai-payangal-in-tamil

Tag : vegetable |

பொதுவாக முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் முக்கியமான மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். முருங்கை பொருட்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * கர்ப்பிணிக்கான புதையல் * ஆஸ்துமா மார்புச்சளி நீக்கவல்லது * இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் * சிறந்த மலமிளக்கி * ரத்தம் விருத்தியாகும் * விந்து விருத்தியாகும் * மூட்டுவலிக்கு சிறந்தது * முகப்பொலிவிற்கும் பயன்படுத்தலாம் * மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் * உடல் வெப்பத்தை தணிக்கும் * எலும்புருக்கி நோய்க்கு சிறந்தது * இருதய நோய்களிலிருந்து விளக்கும் * பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் * வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் * சிறுநீர் எரிச்சலை சரி செய்யும் * தாது விருத்திக்கு முருங்கையின் பிசின் பயன்படும்
Laddu Muttai | 10-06-2020