1. அத்திபாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும். 2. வெங்காய சாறை கடுகு எண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர வாத மூட்டுவலி குணமாகும். 3. மூட்டுவலி, வீக்கம் குணமாக கணை பூண்டு இவைகளை வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்டிவர குணமாகும். 4. வாதநாராயணன் இலையை பொடி செய்து காலை, மாலை 1/4 கரண்டி சாப்பிட்டு வர மூட்டுவலி, இடுப்பு வலி குணமாகும். 5. பச்சை கற்பூரத்துடன், புதினா இலை சாறை கலந்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவ மூட்டு வலி நிற்கும். 6. பாகற்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூட்டுகள் உறுதிப்படும். அதனால் மூட்டுவலி குறையும். 7. முடக்கத்தான் சூப், வாதநாராயணன் கீரை சூப், அகத்திக்கீரை சூப், ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து சாப்பிடலாம். 8. கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவை மூட்டுவலிக்கு காரணம். எனவே அசைவ உணவை தவிர்த்து அதிக காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களைச் சாப்பிட்டு கொள்வது நல்லது. வரவும். 9. பச்சரிசி சாதத்தில் உடல் வலிமை உண்டாகும். சிறுநீர் எரிச்சலும், பித்தம் போகும். இதனுடன் சிறிது நெய் சேர்த்து உண்பது நல்லது. இல்லையென்றால் உஷ்ணத்தையும், வாயுவையும் உண்டாக்கும். 10. காசுக்கட்டி தேங்காய் எண்ணெயில் குழைத்து சேற்றுப் புண்ணுக்கு இடவும் அல்லது பழைய வெள்ளைத் துணியை (பருத்தி ஆடை) சுட்டு அச்சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவ குணமாகும். 11. மஞ்சள், வசம்பு வகைக்கு 5 கிராம், இதனை கைப்பிடி அளவு மருதோன்றி இலையுடன் சேர்த்து தண்ணீர் சேர்த்து மை போல அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் அடை போல கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து துணியினால் இறுகக் கட்டிவிடவும். இதனை படுக்கப் போகும் முன் செய்யவும். மறுநாள் காலையில் அவிழ்த்து விடவும்.இது போல் தொடர்ந்து 21 நாட்கள் கட்டி வந்தால் கால் ஆணி மறைந்து விடும். 12. மாவிலங்கப் பட்டையை நீர்விட்டுக் காய்ச்சி அதில் கரிய போளத்தை சேர்த்து அரைத்து கை, கால் மூட்டுகளில் பற்று போட்டு வர மூட்டு வீக்கம், வலி பிடிப்பு குணமாகும். 13. 50 கிராம் குங்குலியத்தை தூள் செய்து 500 கிராம் நல்லெண்ணெயில் காய்ச்சி பூசி வரவும். 14. உளுத்தம் பருப்புடன் முடக்கத்தான் கீரையை கூட்டி துவையல் செய்து உண்ண வாத நோய்கள் & மூட்டுகள் வலிமை பெறும். 15. பருவமடைந்த பெண்கள் & வலியுடன் பிரசவமான பெண்களுக்கு உளுந்துடன் சிறிது பனை வெல்லம் கருப்பட்டி சேர்த்து கஞ்சி அல்லது களி செய்து சூடாக காலை & மாலை சாப்பிட்டு வர இடுப்பு எலும்பு & உடல் பலன் உண்டாகும்.இதனை ஆறவைத்தோ, இரவில் சாப்பிடக்கூடாது.