vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai அகத்திக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் agathikeerai-maruthuva-payangal

அகத்திக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

agathikeerai-maruthuva-payangal

1. மனித உடலில் எலும்புகளின் வளர்ச்சிக்கு அகத்திக்கீரை ஆனது பெரிதும் உதவுகின்றன. இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்றன. 2. வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அகத்திக் கீரையுடன் பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும். 3. அதிகப்படியான கீரையை சாப்பிட்டால் அதுவே வாயுத்தொல்லைக்கு ஆதாரமாக விளங்கும். முதிர்ந்த கீரைகளை சாப்பிடாமல் இளந்தளிர்களை மட்டும் சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை மட்டும் உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும். 4. வாய்ப்புண் சரியாவதற்கு அகத்திக்கீரை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும். 5. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் ஆனது அதிக அளவில் சுரப்பதற்கு அகத்திக்கீரை ஆனது பெரிதும் உதவி புரிகிறது. கசாயம் செய்தும் சாப்பிடலாம். 6. உடல்களில் அவ்வப்போது உண்டாகும் அரிப்பு பிரச்சனைகளை நீக்குவதற்கு அகத்திக்கீரை பெரும்பங்காற்றுகிறது. உடம்பில் உள்ள புழுக்களை கொல்லும் சக்தியானது அகத்திக்கீரை இலைகளுக்கு உண்டு.




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020