1. என் ஸ்வாசத்தினுள் நுழைந்த காற்று
மனதை விட்டு வெளிவர மறுக்கிறது !
நான் உன்மேல் வைத்துள்ள காதலை
அந்தக் காற்று கண்டுகொண்டதாலோ?
2. பேனா பிடித்து கவிதை எழுத
கொள்ளை பயம் ...
வார்த்தைகளை யோசித்தால் முந்தி வருவதோ உன் நியாபகமாயிற்றே...
3. அண்ணல் அவர்கள் சட்டம் இயற்றவில்லையாம் !
விடுதலையின்றி தவிக்கிறேன்
அவள் மனதில்...
4. இரு வரி கவிதைப் போட்டியாம்
வெற்றிபெற்றதோ ,
பேனாவை கடித்த அவள் இதழ்கள்...
5. அடை மழைக்கு ஒதுங்கி
சுட்டுக்கொண்டேன்
அவள் பார்வையில்...
<h2 class="backlink" stlye="font-size: 16px;">காதல் தோல்வி கவிதைகள்</h2>
<p class="patthi">6. கண்களில் உன்னையும் நம் காதலையும்
நிறுத்திய பாவத்திற்கு , அலைகிறேன் இன்று குருடனாய்...
7. ஒன்றை நினைத்து ஒன்றை மறப்பது காதலானால்
கடைசிவரை இருந்திடுவேன் உன் நினைவில் !
என்னையும் மறந்து ...
8. என் மூச்சு காற்றில் காதலை சேர்த்துவிட்டு
ஏன் என்னை மட்டும்
காற்றில்லா கிரகத்தில் வாழ சொல்கிறாய்...</p>