Macham-palangal | | Tamil Best Beauty tips site | Laddu muttai மூக்கின் மீது மச்சம் இருந்தால் என்ன பலன் - பெண்களுக்கு mookil-macham-palangal

மூக்கின் மீது மச்சம் இருந்தால் என்ன பலன் - பெண்களுக்கு

mookil-macham-palangal

"மூக்கின் மீது எங்கேயாவது மச்சம்" இருந்தால், அத்தகைய பெண் மிகவும் பாக்யவதியாக இருப்பாள். அவளுடைய எண்ணங்களெல்லாம் நிறைவேறும். "மூக்கின் நுனியில் சிவப்பு நிறம் மச்சம்" இருந்தால், அவள் பட்டத்தரசியாவாளென்று சாஸ்திரம் கூறுகிறது. அதாவது உயர்ந்த செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்து, சகல போகங்களையும் அனுபவிப்பாள். "மூக்கு நுனியில் கருப்பு நிறம் மச்சம்" இருந்தால், அத்தகையவள் நடத்தை கெட்டவளாக இருப்பாள். கணவனைத் தானே கொல்பவளாகவும் ஆவாள் என்று சாஸ்திரம் உரைக்கின்றார். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.




vayitril-macham-palangal-machapuraanam
பொதுவாக : வயிற்றின் மீது மச்சம் உள்ள மனிதன் அழுக்குத் துணியும் பரட்டைத் தலையுமாகப் பார்ப்பதற்கு மிகவும் விகாரமாகக் காட்சியளிப்பான். வறுமை காரணமாக வசதியுள்ளவர்களை கண்டு பேராசையும் பொறாமையுமாக காலம் கழிப்பார். "வயிற்றின் மீது வலப்புறத்தில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் எவ்விதமான மோசமும் பித்தலாட்டமும் செய்யாமல், உடல் உழைத்து உண்பவர்கள். வருவாய் கொஞ்சமாக இருந்தாலும் உள்ளதைக் கொண்டு திருப்தியடைவார்கள். இவருடைய நேர்மையைக் கண்டு பலருடைய பாராட்டுதலையும் இவர் பெறுவார். "வயிற்றின் மீது கீழ் பாகத்தில் மச்சம்" இருந்தால், மிகவும் உடல் மெலிந்து காணப்படுவார்கள் இவர்களுக்குத் தாங்க முடியாத ஏதாவது நோய், உபத்திரவம் செய்து கொண்டே இருக்கும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
vaayil-macham-palangal
பொது: மோவாய் கட்டில் எங்காகிலும் மச்சம் உள்ளவர்கள் வாழ்க்கையில் சகல வசதிகளும் ,பெற்ற செல்வந்தர்களாக இருப்பார்கள். மக்களால் மதிக்கப் பெற்று பெரும் புகழுடன் வாழ்வார்கள். மோவாய்க்கட்டை வலதுபுறம் மச்சம் இருந்தால், புகழ் மிகுந்தவனாகவும் செல்வச் சீமானாகவும் திகழ்வான். எடுத்த காரியங்கள் திறம்படச் செய்யும் செயலாளனாகவும் அறிவாளியாகவும் இருப்பான். "மோவாய்க்கட்டை இடதுபுறம் மச்சம்" இருந்தால் மிகவும் தரித்திரனாகவும், மூடனாகவும் இருப்பான். மற்றும் மூர்க்கனென்று பிறர்களால் இகழப் பெறுவான். "மோவாய்க்கட்டின் நடுவில் மச்சம்" இருந்தால் தரும நெறி தவறாதவன், வீடு, வாசல், நிலபுலன் முதலிய சகல வசதிகளும் பெற்றவன். எடுத்த கருமத்தைச் செயலாற்றும் திறமையாளன். "மோவாய்க்குக் கீழே எங்கு மச்சம்" இருந்தாலும் மிக்க அறிவாளியாகத் திகழ்வான். சங்கீதத்திலும், இலக்கியங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்ற வித்துவானென்று பாராட்டப் பெறுவான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
mothira-viralil-macham-palangal
"மோதிர விரல் நகத்தின் மீது கருத்த மச்சம்" இருந்தால், எந்தக் காரியத்திலும் தோல்வி ஏற்படும். மக்களிடையே அகௌரவம் ஏற்படும் அவர்கள் செய்யும் இத்தொழிலில் நஷ்டமே ஏற்படும்; லாபம் இராது. இவர்களால் பிறருக்கு உபகாரம் இராது. அதற்கு மாறாகப் பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள். "மெற்கண்ட மச்சம் மோதிர விரல் நகத்தில் மீது வெளுப்பாக இருந்தால்" மிக்க அறிவாளிகளாக திகழ்வார்கள். பரிக்ஷகளில் தோல்வி என்பதையே தொழில் காணாதவர்கள். இவர்கள் செய்யும் தொழில்கள் இவர்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும். அனுபவிப்பதுடன் பிறருக்கும் உபகாரம் செய்யும் கொடையாளிகள். பேரும் புகழும் பெற்று வசதியுடன் வாழ்க்கை நடத்துவார்கள். "வலது கை மோதிர விரலில் மச்சம்" இருந்தால் மிக்க அறிவாளியாகவும், பிடிவாத குணமுள்ளவனாகவும் இருப்பான். வாழ்க்கைக்குரிய வசதிகள் நிரம்பப் பெற்றிருப்பான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
mookil-macham-palangal
"மூக்கின் நுனியில் மச்சம்" இருந்தால் மிகவும் முன்கோபியாக இருப்பான். கர்வியாகிப் பிறரை மதிக்க மாட்டேன் மற்றவர்களிடம் உள்ள சிறப்பான அம்சங்களைப் பாராட்டுவதென்பது இவனது அகராதியில் இராது. மற்றும் பிறர் குணங்களைத் தோஷங்களாகக் கருதும் இயல்புடையவன். இவன், தான் தொடங்கும் எந்தக் காரியத்தையும் மிக்க விரைவில் எளிதாகச் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவன். உலகமே திருணமென்று நினைக்கும் அலட்சிய மனப்பான்மை உள்ளவன். "மூக்கின் வலதுபுறம் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றியே ஏற்படும். இவர்களுடைய வாழ்க்கையில் முயற்சியால் மட்டுமின்றி எதிர்பாராத வகையிலும் வியாபாரத்தின் மூலமாகவோ, ரேஸ், லாட்டரி போன்றவை மூலமாகவோ பல தடவைகள் தனலாபம் உண்டாகும். "மூக்கின் இடதுபுறம் மச்சம்" இருந்தால் மேற்கண்ட நல்ல பலனுக்கு எதிர்மறையான பலன் ஏற்படும் அதாவது அவர்கள் மிகவும் முன் செய்யும் தொழில்களில் எப்பயனும் இராது. எங்கும் நஷ்டமேயின்றி லாபமென்பதைக் காணமாட்டார்கள் . தன்னைக் காட்டிலும் தாழ்ந்த குலத்து பெண்களின் தொடர்பு கொள்வதால் உடல் நலனும் பொருளாதாரம் சீர்குலைந்து அலைவார்கள். "மூக்கின் அடிப்பாகத்தில் மச்சம்" இருந்தால் அத்தகையவர்கள் செய்யும் முயற்சி எல்லாம் வீணாவிடும். வேலை வெட்டி இல்லாமையால் கையிருப்பு பணத்தையெல்லாம் செலவு செய்து, வாழ வழி தெரியாமல் திண்டாடுவார்கள். "மூக்குக்கு அருகில் மச்சம்" இருந்தால், மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்துவார்கள். வாசனை பொருள்களை அதிக அளவில் வாங்கி அனுபவிப்பதில் விருப்பமுள்ளவர்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
muzhangalil-macham-palangal
ஆண்களுக்கு இடது முழங்காலில் மச்சம் இருப்பது நன்மையளிக்கும். ஆனால், வலது முழங்காலில் மச்சம் இருந்தால் நன்மை தரும். இவர்கள் பிறவிலேயே அதிருஷ்டசாலிகள். இவர்களுக்கு உயர்ந்த குடும்பத்தில் இருந்து மனைவி கிடைப்பாள். அதன் மூலம் பலவகையில் உதவி ஏற்படும். மனைவி மக்களிடம் அன்பும் ஒற்றுமையும் நிலவும். இம் மச்சமுள்ளவர்களில் சிலர் வேசிலோலர்களாகவும் இருப்பதுண்டு. வலது முழங்காலில் மச்சமுள்ளவர்கள் எந்த வேலையை மேற்கொண்டாலும் அதில் வெற்றியே ஏற்படும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
muthugil-macham-palangal
பொது: முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும், அத்தகையவர்கள் அவர்கள் மிக்க அறிவாளிகளாக திகழ்வார்கள். வாழ்க்கைக்குரிய சகல வசதிகளையும் வீடு, வாசல், வாகனங்கள் முதலிய சுகத்தையும் பெறுவார்கள். தெய்வ பக்தி நிரம்பியவர்களாகத் திகழ்வார்கள். நல்லோர்களின் சேர்க்கையுண்டாகும் மிக்க அறிவாளிகளென்று மக்களால் போற்றப்படும் சிலருக்கு முதுகில் மச்சம் இருக்கும். "முதுகின் இடது பக்கம் தோள்களுக்கு அருகில் மச்சம்" இருந்தால், அவர்கள் செய்யும் செயல்களெல்லாம் மிகவும் முன்யோசனையுடன் கூடியனவாகவும் தக்க பலனளிப்பனவாகவும் இருக்கும். "முதுகின் வலது தோள்களுக்கு அருகில் மச்சம்" இருப்பவர்கள் மிகவும் தைரியசாலிகள் இருப்பார்கள். இவர்களில் சிலர் படைவீரர்களாக, சண்டையிடுவதில் வல்லமையுடையவர்களாகவோ, இருப்பார்கள். உடல் வலிமை மிக்கவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். "முதுகில் முதுகெலும்பின் அருகில் மச்சம்" உள்ளவர்கள் அரசாங்க அதிகாரிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு தனது பதவியில் திடீரென ஏற்றும் உண்டாகும். அரசாங்கத்திற்கு ஆலோசனை செலும் அதிகாரிகளாகவும் சிலர் இருப்பார்கள் செல்வமும் செல்வாக்கும் பெற்று புகழ்மிக்கவர்களாகத் திகழ்வார்கள். "முதுகின் வலது அல்லது இடது ஓரத்தில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் எந்த வேலையையும் துணிவுடன் செய்யமாட்டார்கள். அதனால் கோழை யென்றும், சோம்பேறியென்றும் பிறரால் கேலி செய்யப்படுவார்கள். "முதுகெலும்பின் அடிபாகத்தில் பீடத்தின் இடையே மச்சம்" இருந்தால், மிகவும் ஆரோக்கியம் உள்ளவனாகவும், நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் இருப்பான், இவர்களில் சிலர் யோகாப்பியாசம் செய்து உடல் வலிமையையும் உள்ளத்தின் வலிமையையும் வளர்த்துக் கொள்வார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
maarbil-macham-palangal
"வலது மார்பில் மச்சம்" உள்ளவர்கள் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் எதிர்பாராத கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நேருவதன் மூலம் சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்து, துன்பகரமான வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கும். இவர்களுக்கு ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். "இடது மார்பில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் பெண் சந்ததியைக் காட்டிலும் புருஷ சந்ததி அதிகமாக உள்ளவர்கள் வாழ்க்கைக் குரிய வசதிகள் யாதுமின்றி ஏழைகளாகவே காலம் கழிப்பார்கள். அதிகமாக அவர்கள் காமப்பற்றுள்ளவர்கள் எடுத்த காரியத்தை முடித்துவிடக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். "இடது மார்பில் ஸ்தனத்திற்கு இடதுபுறம் மச்சம்" இருந்தால் நெறி தவறிய வாழ்க்கையாளர்களாகவும், நிலையில்லா மனத்தவராகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருப்பர். எப்பொழுதும் பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகமாக உள்ளவர்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020