பொது: காதுகளின் மீது மச்சம் இருப்பது மிகவும் நன்மையைத் தரும். இரண்டு காதுகளின் மீதும் மச்சம் இருந்தால், அவன் மிக்க செல்வம் குடும்பத்தில் பிறந்தவன். தனது முயற்சியாலும், மேன் மேலும் செல்வத்தை வளர்த்து, மிகவும் பாக்கிய சாலியென பாராட்டப் பெறுவான். "செவிகளின் பின்புறத்தில் மச்சம்" இருந்தால் வாழ்க்கைக்குத் தேவையான சகல வசதிகளும் பெற்றவனாகவும் பிதுரார்ஜிதம், ஸ்வார்ஜிதம் இரண்டும் நிறைந்தவராகவும், தனக்கு ஈடான ரூபமும், குணமும், செல்வமும் நிரம்பப் பெற்ற மனைவியை மணப்பவனாகவும் நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் புகழுடன் வாழ்வான். "வலது செவி நுனியில் மச்சம்" இருப்பவர்களுக்கு ஜலகண்டம் ஏற்படுமென்று சாஸ்திரம் கூறுகிறது. மற்றும் இயற்கையாகவே இவர்களுக்குத் தண்ணீர் உள்ள இடங்களில் பயம் ஏற்படும். "இடது செவி நுனியில் மச்சம்" இருந்தால்,காம உணர்ச்சி அதிகமுள்ளவனாகவும், பல்வேறு பெண்களுடன் சல்லாபம் செய்து அதன் மூலம் பல நோய்களுக்கு இலக்காகுபவனாகவும் இருப்பான் வருத்தமடைவான். "வலது செவியின் அடியில் மச்சம்" இருந்தால், அவனுக்கு வாழ்க்கைக்கு உரிய வசதிகள் இருந்தும் வீணாகப் பலவிடங்களில் கடன் வாங்கி கடன்காரர்களின் தொந்தரவுகளால் மனம் கலங்குவான். "இடது செவியின் அடியில் மச்சம்" இருந்தால் எந்த வசதியும் இல்லாமல்ஏழ்மையால் வருந்துவான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.