சுவையான இட்லி பொடி வீட்டிலேயே செய்வது எப்படி இதற்க்கு தேவையான பொருள் காய்ந்த மிளகாய்-10 கடலைப்பருப்பு-1 கப் உளுந்து பருப்பு-1கப் மிளகு-1 தேக்கரண்டி பெருங்காயம்-1/3 தேக்கரண்டி உப்பு -தேவையான அளவு கறிவேப்பிலை -ஒரு கொத்து தேவையான பொருட்கள் அனைத்தையும் மிதமான தீயில் வதக்கி எடுக்க போறோம். எல்லாம் பொருளையும் ஒண்ணா போடப் போறது கிடையாது தனித்தனியாக மிதமான தீயில் எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறத்தில் வறுத்து எடுக்க வேண்டும். முதலில் அடுப்பில் கடாயை வைத்து கடாய் நன்றாக சூடானதும் கடலைப்பருப்பு போட்டு எண்ணெய் ஊற்றாமல் பொன்நிறம் வரவரைக்கும் வதக்கிக்கணும். இதை அடிப்பிடிக்காமல் இருக்க வேண்டும.மிதமான தீயில் அடுப்பை வைக்கவேண்டும். கடலைப்பருப்பு பொன்னிறமானதும், ஒரு தட்டில் மாற்றி வைத்துவிட வேண்டும். இரண்டாவதாக உளுத்தம் பருப்பு எடுத்து கடாயில் போட்டு பொன்னிறமானதும், அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத் தூளும் சேர்த்து மூன்றையும் ஒன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றாமல் வதக்கவும் , பொன்னிறமாக மாறியதும் ஒரு நல்ல மனம்வரும் அந்த நேரத்துல் அதனை ஒரு தட்டுல எடுத்து மாற்றிவைத்துக்கொள்ளவும். அடுத்ததாக கடாயில் காய்ந்த மிளகாய் காரத்துக்கு ஏற்றவாரு 10 மிளகாய் அல்லது அதற்கு மேலாக கூட நீங்க போட்டுக் கொள்ளலாம். அதனுடன் மிளகு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை ஒரு கொத்து இவற்றை எல்லாம் சேர்த்து வதக்கி ஒரு தட்டில் எடுத்து வச்சுக்கணும். கடைசியா நாம வெள்ளை எள்ளு மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும் . எள்ளு தயாரானதும் அடுப்பை அனைத்து விடவும் . முக்கியமாக இந்தப் பொருள் எல்லாத்தையும் நன்றாக ஆறவிட வேண்டும். காய்ந்த மிளகாய் , கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகு , பெருங்காயம் , உப்பு ,கருவேப்பிலை எல்லாம் நல்லா ஆறின பிறகு, இவற்றை அரைக்கும் மிக்சி ஜார் கண்டிப்பாக ஈரமில்லாமல் இருக்கணும். ஈரம் இல்லாமல் இருந்தால் தான் இட்லிப்பொடி கெட்டுப்போகாமல் இருக்கும். மிக்ஸியில நல்லா ஈரம் இல்லாம தொடைச்சு வச்சுக்கோங்க அத்தனை பொருளையும் மிக்ஸியில் போட்டு நல்லா அரைச்சுகணும், சுவையான இட்லி போடி ரெடி . நல்லா காரம் நெடி மூக்குக்கு ஏறும் அதனால மாஸ்க் ஏதாச்சும் போட்டுக்கோங்க. நாம எண்ணெய் போடாம நல்லா வதக்கினனால நீங்க இதை மூணு மாசம் இல்லைனா நாலு மாசத்துக்கு கூட வச்சு சாப்பிடலாம் இது கெட்டுப் போகாமல் இருக்கும்.