Search for

வாயுத்-தொல்லை

Awesome Image
1. விளாம்பழ மரத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள வாய்வு நீங்குவதுடன் நல்ல பசி எடுக்கும். 2. நாவல் பழம்-குளிர்ச்சியை தரக்கூடியது வாய்வு தொல்லை வயிற்று புண்களை ஆற்றும் தன்மை உடையது. நாவல் பழம் சாப்பிட காலத்தில் வயிற்று புண் குணமாகும். 3. வாத நாராயணன் இலையை காயவைத்து இடித்து தூளாக வைத்துக்கொண்டு 5 கிராம் தூளை சுடுதண்ணீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர வாய்வுத் தொல்லை குணமாகும். 4. வாய்வுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது. 5. வெள்ளைப்பூண்டு பசும்பாலில் வேகவைத்து அப் பூண்டை சாப்பிட்டு பால் குடித்தால் வாயு தொல்லை குறையும். 6. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயு தொல்லை நீங்கும். 7. குப்பைமேனி இலையை காயவைத்து பொடிசெய்து காலை, மாலை 12 காண்டி மோரில் கலந்து சாப்பிட அஜீரணம், வாயு குணமாகும். 8. வாதமொடக்கி மரத்தின் கொழுந்துகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயுபிடிப்பு அகலும். 9. வாழைக்காயை இஞ்சியுடன் பூண்டு சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர வாயுத் தொல்லை குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020