1.கருவேப்பிலை துவையல் அல்லது கருவேப்பிலை பொடி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பைத்தியம் மாறும். பித்தம் தணியும்.
2.காய்ந்த வேப்பம் பூவை சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சிவக்க பொரிந்து சிறிது உப்பு போட்டு பிசைந்து 1 கரண்டி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
3.அரச மரத்தின் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
4.செங்கழுநீர் கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து, சலித்து வைத்துக்கொண்டு சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு, பித்தம் தணியும்.
5.குறைய நல்ல பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் தாகம் பித்தம் குறையும்.
6.தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் தணியும்.
7.சிறுவெங்காயத்தைச் சிறிது வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கிச் சாப்பிட பித்தம் குறையும்.
8. அகத்தி கீரை சாப்பிடுவது பித்த கோளாறுகளை அகற்றும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.
9. செலவின்றி நிரந்தர தீர்வுக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துலக்கியவுடன் உடன் வாய் சுத்தம் செய்யும் போது விரல்களால் நாக்கின் அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது உணவுக்குழாய் வழியே உள்ளே இருக்கும் பித்தநீர் முதலில் வெளியேறும். இந்த பித்த நீர் வெளியேற்றம் பல நோய்கள் உருவாவதைத் தவிர்க்கும். மேலும் சளியும் சிறிது சிறிதாக வெளியேறும்.
10. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கூட கலந்து குடித்து வரவும்.
11. 100 கிராம் உலர்ந்த திராட்சை, 200 கிராம் கடுக்காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர, பித்தம், வாந்தி, வாய் கசப்பு தீரும்.
12. சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர், கிராம்பு ஆகியவைகளை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து இந்த தூளை தினம் 2 வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர தலைச் சுற்றல் & பித்தம் குணமாகும்.
13. திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூள் விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்.