Search for

தீப்புண்

Awesome Image
1. தீப்புண் வடு மாற வேப்பம் கொட்டையை நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி இறக்கி அந்நீரை மத்தை கொண்டு சிலிப்பினால் நுரை உண்டாகும். அந்த நுரையை திப்புண் மீது பூச வடு மறையும். 2. தீப்புண் ஆற வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்மீது பூச புண் ஆறும். 3. குப்பைமேனி இலை சாறு சமஅளவு தேன் கலந்து சேர்த்து புண் மேல் தடவி வர தீப்புண் குணமாகும் 4. வேப்பம் பட்டையை இடித்து கசாயமாக காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து குலுக்கி திப்புண் வடுமீது தடவி வர குணமாகும். 5. வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண், சீழ் வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். 6. புளிய மரத்து சொற சொறப்பு பட்டையை பட்டுபோல் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர ஒரு வாரத்தில் புண் ஆறிவிடும். 7. அத்திபால் தடவ தீப்புண் ஆறும். 8. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் 30 மில்லி தேங்காய் எண்ணையுடன், 50 மில்லி சுண்ணாம்பில் ஊற்றிய தெளிந்த நீரை கலந்து தீப்புண் மீது தடவி வர குணமாகும். 9. வேப்பங்கொழுந்தை மோர்விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ புண் குணமாகும். 10. வீட்டில் உள்ள காப்பி டிக்காஷனை தீப்புண் உள்ள இடத்தில் தடவி வர இப்புண் காயம் விரைவில் ஆறும். 11. மருக்கொழுந்து செடியினைப் பறித்து வேரை நீக்கி விட்டு சுத்தம் செய்து நல்லெண்ணெய் கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தீப்புண் மீது தடவி வர குணமாகும். 12. வீட்டில் காப்பி போடுவதற்கு என உள்ள டிக்காஷனை திப்புண் இட்ட இடத்தில் தடவி வர தீப்புண் குணமாகும்
Laddu Muttai | 19-04-2020