கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பு பகுதியில் இருந்து பால் போன்ற பிசுபிசுப்பான திரவம் வெளிப்படுவது இயற்கையானதே பால் சுரப்பிகள் அதிகம் உற்பத்தியாவதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. எனவே இதை கண்டு பயப்பட வேண்டாம் இது முற்றிலும் குழந்தை நன்றாக இருப்பதற்கான மற்றும் உடல் நன்றாக இருப்பதற்கான அறிகுறி மட்டுமே. இருந்தாலும் அதிகமாக அப்படி பட்டுக்கொண்டே இருந்தால் உங்கள் உடல் பலவீனமாக ஆகும் வாய்ப்பு உள்ளது . எனவே நீங்கள் சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் அதற்க்கு தகுந்தாற்போல உங்களுக்கு தேவையான உணவுகளை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் . அதையும் தாண்டி உங்களுக்கு சோர்வாக இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.