கர்ப்ப காலத்தின் போது பிறப்புறுப்பின் வழியே ரத்தம் வடிதல் இரத்தக்கசிவுக்கான காரணங்கள். கர்ப்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அல்லது ஏழு எட்டு மாதங்களில் ரத்த கசிவு பிறப்புறுப்பில் இருந்தால் உடனே மருத்துவரை கர்ப்பிணிப் பெண்கள் அணுகவேண்டும் இதற்கான காரணங்களை பார்க்கலாம். கிருமி தொற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு இது முக்கிய பிரச்சினையாகும் தொற்று ஏற்படுதல். தொற்று ஏற்பட்டு அரிப்பு அதிக இருந்தாலும் அல்லது வெள்ளைப்படுதல் அடிவயிற்றில் வலியும் இருந்தலோ , ரத்தம் கசிவு இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும். தொற்று அதிகமாக இருந்தால் குழந்தை களைவதற்கு இந்த தொற்று முக்கிய பங்கு இருக்கிறது. ரத்த கசிவு அந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். உடலுறவு பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உணர்ச்சி அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளவே மனம் அதிகமாக ஈடுபடும் சில கர்ப்பிணி பெண்களுக்கு இது இருக்காது அதிக ஈடுபாடு காட்ட மாட்டார்கள். கர்ப்பிணிப் பெண்கள் உடலுறவு தங்களுடைய கணவருடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உடலுறவு கொள்வது அவசியம். கர்ப்பிணி பெண்ணின் கர்ப்பப்பை வாய் திறந்திருந்தாள் உடலுறவு உடலுறவு கொள்ளும் பொழுது ரத்த கசிவு ஏற்பட்டு விரைவாக பிரசவமாக நேரிடும். உடல் உறவு கொண்ட பின்பு ரத்தம் கசிவு இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும். நஞ்சுக்கொடி நஞ்சுக்கொடி கீழே இறங்கி இருந்தால் அந்த கர்ப்பிணி பெண் அதிகமாக நடமாடுவது வேலை செய்வது போன்றவற்றைச் செய்யாமல் இருப்பது நலம் இல்லை என்றால் நஞ்சுக்கொடி கீழே இருக்கும் போது கர்ப்பிணி மேலதிக வேலைப்பாடுகளில் ஈடுபட்டால் நஞ்சுக்கொடி கீழ் இறக்கத்தால் அதிக ரத்த கசிவு ஏற்படும் இது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும். பிரசவம் நாள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தன்னுடைய பிரசவ தேதி நெருங்குகிறது என்றால் ரத்தக்கசிவு பனிக்குட நீர் உடைதல் இடுப்பு வயிற்று வலி இதில் ஏதோ ஒன்று குழந்தை பிறப்பதற்கு பிரசவம் நடைபெறுவதற்கு அறிகுறியாகும். பனிக்குட நீர் உடன் ரத்தக்கசிவு பனிக்குட நீர் உடைந்தால் பிரசவம் நடைபெறப் போகிறது என்று அர்த்தம் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றால் உடனே குழந்தை பிறந்துவிடும் என்று அர்த்தம். உள் உறுப்பில் இரத்த கசிவு கர்ப்பிணிப் பெண்களுக்கு உள் உறுப்பில் காயங்கள் ஏதேனும் இருந்தால் ரத்தக் கசிவு அதிகமாக இருக்கும். பிறப்பு உறுப்பில் ரத்தக் கசிவு பிறப்புறுப்பில் மாதவிடாய் போன்று ரத்தக்கசிவு இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும் குழந்தையின் அசைவு இருக்கின்றதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும். மலத்தில் இரத்த கசிவு மலத்துடன் ரத்தக்கசிவு இருந்தால் உடல் அதிக சூட்டுடன் இருக்கிறது என்று காரணமாகும். சுய இன்பம் கர்ப்பிணிப் பெண் சுய இன்பத்தின் போது சில பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றுகள் ஏற்படுவதோடு காயங்கள் ஏற்பட்டு இரத்த கசிவு காரணமாகும். முதல் மூன்று மாதம் இரத்தக்கசிவு முதல் மூன்று மாதங்களில் ரத்தக் கசிவு அதிகமாக இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்ப்பது நலம். இது கருக்கலைந்து அதற்கான அறிகுறி யாக கூட இருக்கலாம். முதல் மூன்று மாதத்தில் குழந்தை 1.6 சென்டிமீட்டர் அளவில் மட்டுமே இருக்கும் கடினமாக கடக்க வேண்டிய காலகட்டம். கர்ப்பப்பை வாய் திறந்து இருத்தல். கர்ப்பப்பை வாய் ஒருசிலருக்கு ஏழு எட்டு மாதங்களில் அல்லது ஆறு மாதத்தில் திறந்து விடும் இந்த சமயத்தில் ரத்தக்கசிவு இருக்கும். பனிக்குட நீர் உடன் ரத்தக்கசிவு இருந்தாள் குழந்தை பிறக்கப் போகின்றது என்று அர்த்தம். கர்ப்பிணிப் பெண்ணின் ஒன்பதாவது இன் கடைசி வாரம் அல்லது 10 ஆவது மாதத்தின் முதல் வாரத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து இருந்து ரத்தம் கசிந்தால் பயப்படத் தேவையில்லை உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகவும் இது உங்கள் பிரசவ கால நேரமாகும்