கர்ப்பிணிப் பெண்களுக்கு உடம்பில் ரத்தம் (ஹீமோகுளோபின்) கம்மியாக இருப்பது இப்பொழுது சாதாரணமாகி வருகிறது. பிரசவிக்கும் நேரத்தில் இவ்வாறு இரத்தம் குறைவாக இருப்பது மிகவும் அபாயகரமானது. எனவே எந்தெந்த உணவுப் பொருட்களை எடுப்பதன் மூலம் ரத்தம் விரைவாக சுரக்கும் என்பதை காண்போம். முருங்கைக்கீரை: முருங்கைக்கீரை யானது சாதாரணமாக கிடைக்கக்கூடிய கீரை வகைகளுள் ஒன்று. இதில் அயன் சத்துக்கள் நிறைந்திருப்பதால் வாரம் மூன்று அல்லது நான்கு முறை கூட எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஹீமோகுளோபின் அளவு முன்பை விட அதிகமாக கண்டிப்பாக நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆட்டு ஈரல்: சுவரொட்டியை வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ஹீமோகுளோபினின் அளவு விரைவாக அதிகரிக்கும். தேன் நெல்லி: தேனில் ஊறவைத்த பெரிய நெல்லிக்காய் ஆனது கர்ப்பிணிப் பெண்களுக்கு உடம்பில் ரத்தம் ஊருவதில் பெரும் பங்காற்றுகின்றது. பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும். மாதுளை: மாதுளை பழச்சாறு தினமும் அருந்துவதன் மூலமாக கர்ப்பிணி பெண்ணின் உடலில் ரத்தம் விரைவாக ஊரும். செவ்வாழைப்பழம்: தினமும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செவ்வாழை பழங்களை தாராளமாக கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். இதனால் அவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது மிகவும் அபாயகரமானது எனவே தகுந்த உணவு பொருட்களின் மூலம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சரியான வகையில் ரத்தம் கிடைத்திட ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முனைப்புடன் இருக்க வேண்டும்.