முதல் மாத கர்ப்பத்தில் மாதவிடாய் தள்ளி போனாலும் ஒரு சிலரால் டெஸ்டர் மூலம் கண்டறிய முடியாது ஐந்தாவது வாரம் அல்லது 40 வது நாட்களில் டெஸ்டர் மூலம் டெஸ்ட் செய்வதன் மூலம் கர்ப்பமாக உள்ளதை அறிவீர்கள்.குழந்தை உங்கள் வயிற்றினுள் இரண்டாவது மாதத்தில் ஒரு சிறு கம்பு (சாப்பிடும் கம்பு) அளவில் மட்டுமே இருப்பார்கள்.இந்த சமயத்தில் குழந்தைக்கு இதயம் வளர்ச்சியை தொடர்ந்து பெருங்குடல் சிறுகுடல் நுரையீரல் உருவாக ஆரம்பித்திருக்கும். இரண்டாவது மாதத்தில் குழந்தை உருவமற்று காணப்படும் இந்த நேரத்தில்தான் குழந்தைக்கு நெஞ்சு பகுதி வயிறு பகுதி தனித்தனியாக பிரிந்து குழந்தைக்கு தலைப்பகுதி என திரிந்து உடலமைப்பு பெறுகின்றது.இரண்டாவது மாதத்தில் மருத்துவரிடம் செல்லும் போது 7 அல்லது 8 வாரத்தில் இயர்லி பிரக்னன்சி ஸ்கேன் செய்யப்படும் இது குழந்தையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதையும் குழந்தையின் இதயத்துடிப்பு தாயின் கர்ப்பப் பையின் அளவு கருவின் அளவு எல்லாம் கணக்கிடப்படும்.
1.இரண்டாவது மாதத்தில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அதில் ஒன்று மார்பக மாற்றம் இது உணர்ச்சி அதிகமாகும், மார்பு லேசாகவும் பாலின் உற்பத்தியாக மார்பு பெரியதாகவும் மாற்றம் ஏற்படும். 2.இரண்டாவது மாதத்தில் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் சோர்வு இருக்காது வாந்தி மயக்கம் இருக்காது அவர்கள் எப்பயும் போல இருப்பார்கள். 3.இரண்டாவது மாத கர்ப்பிணி பெண்களுக்கு உடல் சோர்வு, முதுகு வலி, அடிவயிற்று வலி, கால் வலி, மனமாற்றம், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
1.குழந்தைக்கு பனிக்குட நீரின் மூலமே தேவையான உணவு சத்துக்கள் குழந்தைக்கு சென்றடையும்.பனி குட நீர் குறையாமல் இருக்க தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக எடுத்துக் கொள்ளுங்கள். 2.காய்கறி பழங்கள் விட்டமின் நிறைந்த உணவுகள் சத்துள்ள பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். 3.டீ காபி முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் குழந்தையின் வளர்ச்சியை இது முற்றிலுமாக தடுக்கிறது. 4.ஒரு சில பெண்கள் புகைப்பிடிப்பார்கள் அத்தகையோர் புகைப்பிடித்தலை கர்ப்பமாக இருக்கும்போது தவிர்த்திடுங்கள். 5.கால் வலி இடுப்பு வலி இருப்பவர்கள் சுடுதண்ணீர் சூடாகவோ முதுகிலும் இடுப்பிலும் ஊற்றுவதை தவிர்க்கவும் இது குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். 6.முதல் மாதத்தில் இருந்து நான்காவது மாதம் வரைக்கும் மிகவும் கவனமாக பெண்கள் கடக்கவேண்டும்.அதிக பளு உள்ள பொருட்களை தூக்குவதாலும், வேகமாக நடப்பது அதிகமாக வீட்டு வேலை செய்வது இந்த காரணத்தினால் நஞ்சுக்கொடி கீழே இறங்கி கற்பப்பை வாயை அடைத்து குழந்தை சுகப்பிரசவத்தில் பிறப்பது கடினமாகி ஆபரேஷனுக்கு வழி வகுத்து விடும்.5 அல்லது 6 மாதத்திற்கு மேல் எல்ல வேலைகளையும் உடலுக்கு ஏற்றவாறு செய்வது நலம். 7.மதுபானங்களை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.இந்த பழக்கத்தால் கர்ப்பம் களைய அதிக வாய்ப்பு உள்ளது. 8. மன அமைதியுடன் சிறு யோகா சிறு நடை பயிற்சி சத்தான உணவுகள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம் இது குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும். 9. கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவும் இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். 10.ஹீமோகுளோபின் அதிகரிக்க ரத்தம் சுரக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும் கற்பம் அடைந்த நாள் முதல் பிரசவம் வரையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அளவு இரத்தம் இருந்தே ஆகவேண்டும்.