skin-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai காயம்பட்ட இடத்தில் தழும்புகள் மறைய என்ன செய்ய வேண்டும் laddumuttai

காயம்பட்ட இடத்தில் தழும்புகள் மறைய என்ன செய்ய வேண்டும்

laddumuttai

காயம்பட்ட இடத்தில் ஏற்கனவே இருந்த சருமம் சேதமாகி இருக்க புதிதாக செல்கள் வளரும் போது அந்த இடத்தில் புரோட்டின் அமைப்பு மாறுபடுவதால் தழும்பாக தனித்து தெரிகிறது. அதை இயற்கையான பொருட்கள் கொண்டு சரி செய்யும் வழிகள். இதற்கு தேவையான பொருட்கள், கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், மூன்றையும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக்கொண்டு நன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்னர் உடலில் எங்கு எங்கு தழும்புகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இதனை தடவிவந்தால் விரைவில் தழும்புகள் மறையும். கற்றாழை ஜெல்லை தடவி வருவதன் மூலமும் தழும்புகள் விரைவில் குணமடையும்.




1. பீர்க்கங்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும். 2. தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். 3. பிர்க்கன் காய் வேர் கஷாயம் செய்து சாப்பிட ரத்தசோகை நீங்கும். 4. ரத்த சோகையைப் போக்க தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
Laddu Muttai | 19-04-2020
1. வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி, காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு வராது. 2.மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்டால் எல்லா வகையான வயிற்றுப் போக்கும் குணமாகும். 3. அம்மான் பச்சரிசி இலை, துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் சாப்பிட்டு வர வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாகும். 4. மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்று கடுப்பு குணமாகும். 5. நல்லெண்ணெய் சுண்டவத்தலை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு 1 கரண்டி சுடுசோற்றில் 2 உருண்டை சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும். 6. வேலிப்பருத்தி இலை சாறு (சமூலம்) கொதிக்க வைத்து சங்கு அளவு புகட்ட வயிற்று புழு வெளியேறும். வசம்பு சுட்டதூள் சேர்த்து கொடுக்க மாந்தம், கபம், கோழை நீக்கும். 7. பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் ஒழியும். 8. வெற்றிலையுடன் சிறிது ஓமத்தை சேர்த்து மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன்கலந்து குடிக்க உடனே வயிற்றுப்போக்கு குணமாகும். 9. மாதுளம் செடியின் வேரை சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி அந்த நீரை பருகினால் வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழியும். 10. காய்ந்த நெல்லிக்காயை வாணலியிலிட்டு இளவறுப்பாக வறுத்து பொடி செய்து, கோழி முட்டை வெள்ளை கரு சேர்த்து சாப்பிட்டு வர வயிற்று கடுப்பு நீங்கும். 11.சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து குடிக்க வயிற்று உப்புசம் பேதி தீரும். 12. வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும். வயிற்றுப்புண் இருந்தால் வராது. உடல் ஊட்டமாகும். 13. பல்துலக்கும் போது பிரஸ் பற்பொடியை உபயோகிக்காமல் வேப்பங்குச்சியை கொண்டு பல்துலக்கினால் பல்லில் உள்ள கிருமி, வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழியும். 14. வயிற்றுப் பூச்சிகள் ஒழிய மாதுளம் செடியின் வேரைப் பறித்து வந்து சுத்தம் பார்த்து நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரைப் பருகினால் வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழியும். 15. நெல்லிக்காய் சாறு பிழிந்து சாப்பிட்டுவர ஆசனவாய் கடுப்பு மற்றும் வயிற்றுக் கடுப்பு நீங்கும். 16.அன்னாசிபழத்தை தினசரி சாப்பிட்டுவர வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். 17. வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் தொட்டாற்சிணுங்கி இலையை மைய அரைத்து தயிருடன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நிறுத்தலாம். 18. சாதம் வடிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் சிறிது பனங்கல்கண்டும் கலந்து சூட்டோடு சாப்பிட்டுவர குணமாகும். 19. தொட்டால் சிணுங்கி இலையை பறித்து வந்து நீர்விட்டு அரைத்து சிறு உருண்டை பசுந்தயிரில் கலந்து சாப்பிட வயிற்றுக்கடுப்பு நீங்கும். 20. காலையில் எழுந்ததும் பல் துலக்கியதும் வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு தயிரைக் குடிக்க குணமாகும். 21. மிளகு பாகில் அரைத்து கொட்டை பாக்கு அளவு சாப்பிட வயிற்றில் வண்புழுக்கள் வெளிவரும்.
Laddu Muttai | 19-04-2020
1. பெருங்காயத்தை பொரித்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும். 2. குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம். 3. அகத்தி இலையை வெயிலில் காயவைத்து பொடி செய்து காலை, மாலை 1/2 கரண்டி பாலில் கலந்து குடிக்கலாம். வயிற்று வலி குணமாகும். 4. கசகசாவுடன் கருப்பட்டி சேர்த்து 4 கிராம்பு பொடி செய்து 3 வேளை சாப்பிட வயிற்று வலி நீங்கும். 5. குப்பைமேனி இலையை காயவைத்து பொடிசெய்து காலை, மாலை 12 காண்டி மோரில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும். 6. வடித்த கஞ்சியில் வெந்தய தூள் ஒரு ஸ்பூன், பனங்கல் கண்டு 2 ஸ்பூன் சேர்த்து கலக்கி குடிக்க குணமாகும். 7. மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி அந்த தாளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும். 8. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி தீரும். 9. வயிற்று வலி உள்ளவர்கள் அகத்திக் கீரையை சுத்தம் செய்து நீர் விட்டு வேக வைத்து. அந்த நீரில் சிறிது தேன் கலந்து குடித்தால் கடுமையான வயிற்று வலி குணமாகும். 10. 200 மில்லி குளிர்ந்த நீரில் ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அதில் 10 மில்லி கிராம் ஆப்ப சோடாவையும் கலந்து குடிக்க வயிற்று வலி குறையும். 11. வில்வ வேரை பறித்து வந்து சுத்தம் செய்து மைய அரைத்து பாலுடன் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, வயிற்று வலி குணமாகும். 12. கொதிக்கும் நீர் ஒரு டம்ளரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு நன்றாக கலக்கி குடிக்கலாம். 13. முருங்கை இலைச்சாறு 2 தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை பருக வயிற்று வலி நீங்கும். 14. மிலி கொதிநீரில் 10 கிராம் கிராம்பை நசுக்கிப் போட்டு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிடவும். 15. அருகம்புல்லும், வேப்பிலையும் சமஅளவு எடுத்து கஷாயம் வைத்து தினமும் அரை டம்ளர் என மூன்று நாட்கள் அருந்த வயிற்றுவலி குணமாகும். 16. கடம்பு பழச் சாற்றோடு சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி நீங்கும். 17. முருங்கை இலைச்சாறு ஒரு தேக்கரண்டியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நாக்குப் பூச்சிகள் அழிந்து வயிற்று வலியும் போகும்.
Laddu Muttai | 19-04-2020
1. வெங்காயச் சாறு, மாவிலங்க இலை சாறு, மோர் இவை 100 மிலி வீதம் கலந்து 3 நாட்கள் காலையில் குடித்த பின் ஆறு நாட்கள் பத்தியமிருந்து தலை முழுகவும். இதனால் வயிறு வீக்கம். பாண்டு ரோகம் கூட நீங்கி விடும். 2. சுக்கு, சீரகம், சிறுபுள்ளடி எல்லாவற்றையும் புளியங்கொட்டை அளவு எடுத்து நசுக்கி, தாய்ப்பாலில் ஊறவைத்து பிழிந்து இதை அரை அளவு பாலாடை அளவிற்கு எடுத்து ஒரு முறை கொடுத்தாலே வயிற்று உப்புசம் சரியாகி விடும். 3. சிறு துண்டு பிரண்டையை எடுத்து, அதுமேலே உப்பைத் தடவி, ஒரு ஓட்டில் வைத்து தீயில் காட்டினால் பட, படவென வெடிக்கும். இதை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு வைக்கவும். குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால் இந்த தண்ணீரில் அரை பாலாடை கொடுத்தாலே போதும்.
Laddu Muttai | 19-04-2020
1. திப்பிலி வேரை பால்விட்டு அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும் 2. வெள்ளைப்பூண்டு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும். 3. கோதுமையை பொன்னிறமாக வறுத்து எடுத்து சலித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு தினசரி சிறிது மாவை எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து மாவைப்பிசைந்து சாப்பிட்டு வர குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று நீர் பருகி வர ஆஸ்துமா குணமாகும். 2. சங்கு இலையை துவையலாக சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும். 3. முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய்விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா, மூச்சு திணறல் குணமாகும். 4. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் உணவில் வெண்டைக்காயைச் சேர்த்து கொண்டால் மேலும் ஆஸ்துமாவை அதிகப்படுத்தி விடும். 5. முசுமுசுக்கை இலையை பறித்து சுத்தம் செய்து அரிந்து வெங்காயத்துடன் நெய்விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா மூச்சுத்திணறல் குணமாகும் 6. ஆஸ்துமா நோய் கண்டவர்கள் தினசரி இரவு படுக்கச் செல்லுமுன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு சிறிது நாட்களில் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும். 2. பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். 3. நிலபூசணி கிழங்கை சாறு பிழிந்து பசும்பாலில் விட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை 3 மாதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். ஆண்மை பெருகும். 4. கருஞ்சீரக எண்ணெய் ஆண்குறியில் தடவி வந்தால் ஆண்குறி பெருக்கும். 5. தவசி கீரை, முருங்கை கீரை, சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். 6. இரவு படுக்கைக்குச் செல்லம் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வர குறை நீங்கும். 7. ஆண்கள் விந்து எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் அரச விதையை பாலில் கலந்து குடித்து வர விந்து எண்ணிக்கை அதிகரிக்கும். 8. அரச மரத்தின் பழம், வேர், பட்டை, இலைகளை தூள் செய்து இந்த தூளை சுடுபாலில் போட்டு குடித்துவர ஆண்மை பலம் உண்டாகும். 9. அமுக்கிரா கிழங்கு பொடியுடன் தேனும் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும். 10. வீரியம் பெற மகிழம் பூவை நீர்விட்டு காய்ச்சி அந்த நீரை ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். 11. கருஞ்சீரக எண்ணெய் வெற்றிலையில் பூசி உண்டு வர ஆண்மை பெருகும். 12. ஓரிதழ் தாமரை பொடி செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர சுக்கில விருத்தியாகும். ஆண்மை பெருகும். 13. ஆலம்பழத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் சாப்பிட்டு வர ஆண்மை வலு பெறும். 14. திப்பிலி பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். 15. காமபெருக்கி அத்திப்பழம், அத்தி பிஞ்சு, அத்திபழம் சாப்பிட காம பெருக்கியாக செயல்படும். 16. சர்க்கரை கலந்த பசும்பாலில் உளுத்தம்பருப்பை ஊற வைத்து பின் காய வைத்து மாவாக்கி கூட சிறிது வெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு கேக் செய்து சாப்பிட ஆண்மை குறைவு நீங்கும். 17. ஆண்க ளுக்கு மகிழம்பூவை பறித்து சுத்தம் செய்து நீர் விட்டுக்காய்ச்சி அந்த நீரை ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்துச்சாப்பிட ஆண்மை விரிய உணர்வு உண்டாகும்.
Laddu Muttai | 19-04-2020