கர்ப்பிணி பெண்கள் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க மற்றும் ரத்தம் அதிகரிக்க குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்க புரோட்டின் பவுடர் மற்றும் கால்சியம் மாத்திரை பரிந்துரை செய்வார் இதனை கர்ப்பிணி பெண் கட்டாயம் சாப்பிட வேண்டும்.முதல் மாதம் இரண்டு மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பமாக இருப்பதை சில கர்ப்பிணிப் பெண்கள் உணர முடியாது ஆனால் சில பெண்களுக்கு உடல் சோர்வு கால் வீக்கம் வாந்தி மயக்கம் குமட்டல் இவை இருக்கும்.பயப்படத் தேவையில்லை கர்ப்பிணி பெண்கள் நான்காவது மாதம் கடக்கும் நேரத்தில் வாந்தி குமட்டல் மயக்கம் இவை அனைத்தும் சரியாகிவிடும் சில பெண்களுக்கு இவை தொடரும். உங்க கருவில் இரண்டாவது மாதத்தில் உங்களுக்கு அருகில் உள்ள குழந்தையின் அளவு ஒரு கருப்பு திராட்சை அளவில் மட்டுமே இருக்கும்.குழந்தை வயிற்றில் கைகால்கள் இருந்தாலும் வால் போன்று இடுப்புக் கீழ் பகுதியில் குழந்தைகளுக்கு இருக்கும் அது குழந்தை வளர வளர வால் போகிவிடும். உங்களது கர்ப்ப காலத்தில் உங்கள் மனநிலை மாறுபடும் ஒருவர் மிக சந்தோஷமாக இருப்பார் சில கர்ப்பிணி பெண்கள் எதர்க்கும் சட்டென்று கோபப்படுவார்கள். மன நிலை மாற்றத்தால் சில கர்ப்பிணிப் பெண்கள் அவதிப்படுவார்கள். முதல் மூன்று மாதம் கர்ப்பிணி பெண்கள் கண்டதை சாப்பிடாமல் உடலுக்கு தேவையான சத்து நிறைந்த பழங்கள் ,காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி சாப்பிடுவது நல்லது இவை சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கும் தாய்க்கும் ஊட்டச்சத்து குறையாமல் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். முதல் மூன்று மாதம் அதிக தூரப் பயணம் தவிர்ப்பது நல்லது காரணம் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. யோகா உடற்பயி்ற்சி முதல் மூன்று மாதங்கள் தவிர்ப்பது நல்லது. முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு உறங்கும் முறை உணவு முறை அனைத்து மாறுபடும் இது உங்க மனநிலையும் மாற்றும். கர்ப்பப்பை வளர வளர உடம்பில் மாற்றங்கள் ஏற்படும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும் இதனால் பயப்படத்தேவையில்லை. கர்ப்பப்பை வளருவதால் இடுப்பு வலி தசை பிடிப்பு ஏற்படும் இதனால் கர்ப்பிணி பெண்கள் உறங்க சிரமப்படுவீர்கள். மனநிலையை ஒரே மாதிரி வைத்திருக்க பழகுங்கள். கிடைக்கும் நேரத்தில் உறக்கம் வந்தால் தவிர்க்காமல் தூக்கம் வரும் பொழுது கர்ப்பிணி பெண்கள் தூங்குவது மிகவும் நல்லது குழந்தைக்கும் தாய்க்கும். வாந்தி மயக்கம் ஏற்படுகிறது என்றால் உணவை சிறு சிறு இடைவெளியில் உட்கொள்ளவும் அதிகமாக உட்கொண்டால் உறங்குவதற்கும் சிரமப்படுவீர்கள் வாந்தி வருவது போன்று எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் வாந்தி மயக்கம் இருப்பவர்கள் சிறு சிறு இடைவெளியில் வாந்தி எடுத்தாலும் வாந்தி எடுத்த பின்பு உணவை உட்கொள்ள வேண்டும்.முதல் மூன்று மாதங்களில் இருந்து கர்ப்பிணி பெண்கள் இறுக்கமான துணியை வயிற்றின் அடி பகுதியில் மற்றும் தொப்புளில் அணிவதை தவிர்த்திடுங்கள். தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் இது பனிக்குட நீர் குறையாமல் பாதுகாக்கும் கர்ப்பமாக இருப்பதால் பெண்கள் இரண்டாவது மாதத்தில் இருந்தே செரிமான பிரச்சனை வாயுக் கோளாறு ஏற்படும். வாயு அடிக்கடி வெளியேறும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் ஜீரணம் ஆகவில்லை என்றால் வாந்தி உடனே ஏற்படும் உடல் சோர்வடைந்து விடும் நன்றாக மென்று சாப்பிடவும். முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம். சில கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாவது மாதம் முடியும்போது குழந்தை அசைவுகள் தெரியக்கூடும். ஆனால் குழந்தை அசைவு சில கர்ப்பிணி பெண்களால் மூன்றாவது மாதம் முடியும் முன்பு உணர முடியும்.