பொது: விரைகள் மீது எங்காகிலும் மச்சம் இருந்தால், அத்தகையவர்கள் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் எந்த காரியத்தையும் மிகவும் தைரியத்துடன் செய்து முடிப்பவர்கள் அவர்களுக்கு அளவுக்கு மீறி குழந்தைகள் இருக்கக்கூடும். "விரைகளின் வலது புறத்தில் மச்சம்" இருந்தால் ஆண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். "விரைகளின் இடது புறத்தில் மச்சம்" இருந்தால் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். "விரையின் மேல்பாகத்தில் மச்சம்" இருந்தால், எந்த விதமான குறைபாடுமில்லாமல் மிகவும் சுகமான வாழ்க்கை உள்ளவர்களாக திகழ்வார்கள்.அவரவர்கள் வாழ்க்கைத் தரத்திர்கேற்றபடி சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், மோட்டார் கார், போன்ற வசதிகள் உண்டாகும். இவைகளுடன் மாட்டு வண்டி, குதிரை வண்டி, சைக்கிள் ரிக்ஷா போன்ற வாகன வசதிகளும் இருக்கும். தமக்குள்ள செல்வப் பெருக்கைத் தாமே அனுபவிக்காமல் சுற்றத்தாருடனும் நண்பர் களுடனும் பகிர்ந்து கொள்ளும் பரந்த மனப்பான்மை இவர்களுக்கு இருக்கும். "இடது விரையின் மேல் பாகத்தில் மச்சம்" இருந்தால், அவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிகவும் மதிப்போடு நாணயமாகா வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்கள்.இவர்களிடமுள்ள நேர்மையான வாழ்க்கை முறையினால் பிறர் இவர்களை நல்லவர்களென்று போற்றுவர்கள். மனம், வாக்கு, உடல் என்னும் கரணங்களும் சுத்தமாக உள்ளவர்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.