பொது: மோவாய் கட்டில் எங்காகிலும் மச்சம் உள்ளவர்கள் வாழ்க்கையில் சகல வசதிகளும் ,பெற்ற செல்வந்தர்களாக இருப்பார்கள். மக்களால் மதிக்கப் பெற்று பெரும் புகழுடன் வாழ்வார்கள். மோவாய்க்கட்டை வலதுபுறம் மச்சம் இருந்தால், புகழ் மிகுந்தவனாகவும் செல்வச் சீமானாகவும் திகழ்வான். எடுத்த காரியங்கள் திறம்படச் செய்யும் செயலாளனாகவும் அறிவாளியாகவும் இருப்பான். "மோவாய்க்கட்டை இடதுபுறம் மச்சம்" இருந்தால் மிகவும் தரித்திரனாகவும், மூடனாகவும் இருப்பான். மற்றும் மூர்க்கனென்று பிறர்களால் இகழப் பெறுவான். "மோவாய்க்கட்டின் நடுவில் மச்சம்" இருந்தால் தரும நெறி தவறாதவன், வீடு, வாசல், நிலபுலன் முதலிய சகல வசதிகளும் பெற்றவன். எடுத்த கருமத்தைச் செயலாற்றும் திறமையாளன். "மோவாய்க்குக் கீழே எங்கு மச்சம்" இருந்தாலும் மிக்க அறிவாளியாகத் திகழ்வான். சங்கீதத்திலும், இலக்கியங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்ற வித்துவானென்று பாராட்டப் பெறுவான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.