பொது: உள்ளங்கையில், அதாவது ஆண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால் மிக நன்மையைத் தரும். இடது உள்ளங்கையில் உள்ள மச்சத்திற்கு யாதொரு நற்பலனும் ஏற்படாது. எனவே, வலது உள்ளங்கையில் உள்ள மச்சங்களுக்கு மட்டும் இங்கு பலன்கள் கூறப்பட்டுள்ளன. "வலது உள்ளங்கையில் கடடை விரலின் அடியில் மச்சம்" இருந்தால், மனைவி மக்களுக்கும் விரோதியாவான். பூர்வீக சொத்துகளையெல்லாம் அழித்து விடுவான். காம போகங்களில் அளவுக்கு மீறி செலவு செய்தும் உடல் நெளிந்தும் வேதனை அடைவார். "உள்ளங்கையில் நடு விரலின் அடியில் மச்சம்" இருந்தால், பந்துக்களுக்கும் மனைவிக்கும் விரோதியாவான். பூர்வீக சொத்தை அழித்து விடுவான் வேசி லோலனாகவும் உலக இன்பங்கள் முழுவதையும் அனுபவிப்பனாகவும் இருப்பான். "வலது உள்ளங்கையில் ஆள்காட்டி விரல் அடியில் மச்சம்" இருந்தால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர். சாமர்த்தியமாகப் பேசி பணம் சம்பாதிப்பதில் வல்லவனாகவும் இருப்பான் மக்களின் மத்தியில் இருப்பதைக் காட்டிலும் தனிமையையே அதிகமாக விரும்புவான். "வலது உள்ளங்கையில் மோதிர விரல் அடியில் மச்சம்" இருந்தால் வாழ்க்கைக்குரிய வசதிகளெல்லாம் பெற்றிருப்பான். சஞ்சலம் மனம் உள்ளவன். தன் சக்திக்கு மிஞ்சிய காரியங்களைச் செய்ய முற்பட்டு மன வேதனைகளை மட்டும் சம்பாதித்துக் கொள்வான் "வலது உள்ளங்கையில் சுண்டு விரலின் அடியில் மச்சம்" இருந்தால் நீண்ட ஆயுளும் அளவற்ற செல்வமும் படைத்தவனாக இருப்பான். சந்ததியும் வளர்ச்சியாக இருக்கும். உலக விவகாரத்தில் மிகவும் திறமைசாலியாகத் திகழ்வான். தெய்வ பக்தி, பிராம்மண பக்தி நிரம்பியவன். நினைத்ததை முடிக்கும் திறமையாளன் இவன். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.