பொது: உள்ளங்காலில் (பாதத்தின் கீழ்ப்பகுதியில்) மச்சம் உள்ளவர்கள் அவரவர்கள் தரத்திற் கேற்ப, சைக்கிள், மோட்டார் சைக்கிள், மோட்டார் கார் முதலிய வாகன சௌக்கியங்கள் உண்டாகும். இவர்கள் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் பிரதியானம் செய்து கொண்டே இருப்பார்கள். டிராவலிங் ஏஜெண்டுகள், வியாபாரிகள் முதலியவர்களாகச் சிலர் பணியாற்றுவார்கள். "உள்ளங்காலின் நடுவில் மச்சம்" இருப்பவர்கள் மிகவும் புகழ்பெற்றவர்களாக விளங்குவார்கள். இவர்களில் சிலர் சினிமா, டிராமா முதலியவைகளுக்குப் பாடல்கள் புனைந்து தந்து புகழ் பெறுபவர்களாகவும், அழகிய கவிதைகள் இயற்றும் கவிஞர்களாகவும், சங்கீதக் கலையில் சிறந்தவர்களாகவும் விளங்குவார்கள். இவர்களில் சிலர் மக்களாலும் அரசாங்கத்தாலும் பட்டம் பதவிகள் பெற்றுத் திகழ்வார்கள். அவர்கள் வேறு சிலர் வேசிலோலர்களாகவும் இருக்கக்கூடும். பொதுவாக இவர்களில் பலர் மிகவும் அமைதியான வாழ்க்கை நடத்துவார்கள். "கால் விரல்களுக்கு கீழே உள்ளங்கையில் மச்சம்" இருந்தால், இத்தகையவர்கள் சுகமாகப் பொது வாழ்க்கையை நடத்த முடியாது. எல்லோருடனும் சுமுகமாகப் பழகுவதென்பது இவர்களுக்குத் தெரியாது. ஆகவே மற்றவரும் இவருடன் சேராமல் ஒதுங்கியே சென்று விடுவார்கள். எனவே, அவர்கள் பிறரை வெறுப்பது போல், பிறரால் இவர்களும் வெறுக்கப்பட்டு, வரட்சியான வாழ்க்கையை நடத்து அவர்கள். அனேகம் ஆசைகள் இருந்தாலும் எதையும் நிறைவேற்ற முடியாமல் உலர்ந்த மரம் போல் நின்று விடுவார்கள். "கால் கட்டை விரலுக்குக் கீழே மச்சம்" இருந்தால், பொது வாழ்க்கை மிகவும் நன்றாக அமையும். இவர்களுக்கு எதிலும் தமது முயற்சியில்லாமலே, தானாகவே பிறர் உதவி கிடைக்கும். இவர் மற்றவரை மதிப்போடு நேசிப்பதுடன் சமயோசிதமாகச் சகாயமும் செய்வார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.