"மேல் உதடு கீழ் உதடு இவைகளில் எதன் மீது மச்சம்" இருந்தால், அது அந்தப் பெண்மணிக்கு நற்பயனைக் கூறும். அவள் நற்குலத்தில் பிறந்தவள். வாழ்க்கைக்குரிய சகல போகங்களும் அதற்குத் தேவையான செல்வமும் அதிகமாக இருக்கும் நல்ல நடத்தையும் நற்குணங்களும் பொருந்தியிருப்பால். "மேலுதட்டில் உள்புறமாக மச்சம்" இருந்தால் அவள் தெய்வபக்தி மிக்கவளாக திகழ்வாள் இவர்களில் சிலர் தெய்வீகக் குறிகள் சொல்பவர் களாகவும் இருப்பர். "கீழ் உதட்டின் மீது மச்சம்" இருந்தால், சகல சுக போகங்களையும் அனுபவிப்பாள். "கீழ் உதட்டின் உட்புறம் மச்சம்" இருந்தால், அவள் தீய ஒழுக்கமுள்ளவளாக இருப்பாள். கடினமான பேச்சு இருக்கும். பிறருடன் எப்பொழுதும் சண்டை செய்வதில் விருப்பமுள்ளவள். எல்லோராலும் வெறுக்கபடுபவர். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.