"கட்டை விரலின் மீதாவது, அதன் நகத்தின் மீதாவது வெள்ளை மச்சம்" தோன்றி காணப்பட்டால், அந்த நிலையில் அவர்கள் தொடங்கும் வேலைகள், வியாபாரமோ மிகவும் நிறைவேறுவதுடன் லாபத்தையும் அளிக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும். மேற்கண்ட மச்சம் கருப்பாக இருந்தால், தான் செய்யும் முயற்சிகளில் எல்லாம் தோல்வி அடைவான்.காதல் விவகாரங்களில் ஏமாற்றமும் அவமானமும் அடைய நேரிடும். "வலது கைக் கட்டை விரல் மீது மச்சம்" இருந்தால் அரசாங்க உத்தியோகத்தில் ஒரு பெரிய அதியாகபணி புரிவார் பேச்சில் வல்லவனாகவும் வசதிகள் நிறைந்தவனாக திகழ்வான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.